Tuesday, March 8, 2011

உலக பெண் விஞ்ஞானிகள்

உலக பெண் விஞ்ஞானிகள் யார் யார் என்று யோசித்தபொழுது மேரி க்யூரி மட்டுமே நினைவுக்கு வந்தார். உண்மையில் இவரை தவிர வேறு பெண் விஞ்ஞானிகள் யாருமே இல்லையா என்றால் நூற்றுகணக்கில் இருக்கிறார்கள்.

பெரும்பாலான பெண் விஞ்ஞானிகள் பெண் என்பதாலேயே திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளனர்.

திரு இரா. நடராசன் என்பவர் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "உலக பெண் விஞ்ஞானிகள்" என்னும் நூலை படித்த பொழுது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது .

இந்த நூலை படிக்கும்பொழுது பல உண்மைகள் தெரியவரும் அவற்றில் சில........

1 . பெண் விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் மிகச் சாதாரண குடும்பங்களில் பிறந்து அடிமை முறையில் ஊறிய சமூகத்தை போராடி வென்று தங்களது அறிவு ஜீவிதத்தை நிருபித்தார்கள்.

2 . பேரழிவு ஆதிக்க அறிவியலுக்கு பெண் விஞ்ஞானிகள் யாருமே துணை போகவில்லை.

3 . விஞ்ஞான உலகில் ஆண் விஞ்ஞானிகளின் ஆய்வு கோளாறுகளால் சூழ்ந்த ஆபத்துகளில் இருந்து பெண் விஞ்ஞான உலகம் நம்மைக் காப்பாற்றி மீட்கும் பங்களிப்புகளை வழங்கியுள்ளது.

4 . புவியின் பாதுகாப்பை முன்மொழியும் சுற்றுசூழல் உட்பட நவீன அறிவியல் துறைகளைத் தோற்றுவித்தவர்களே பெண் விஞ்ஞானிகள்தான். எனவே அவர்களுடைய அறிவியல் உலக அமைதிக்கும் ஆக்கத்திற்குமான அறிவியல் ஆகும்.

5 . தனது குடிகார கணவரை தூக்கி எறிந்துவிட்டு தனிமையில் குழைந்தைகளோடு போராடி 192 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிய தேர்ந்த விஞ்ஞானிகளை டொரோத்தி கம்ப்யூட்டர் உலகில் முக்கிய திருப்புமுனையை நிகழ்த்தியும் எந்த வரலாற்று பதிவுமற்று பெண் என்பதாலேயே புறக்கணிப்பட்ட கிரேஸ் முர்ரேஹாப்பர்.

பல பிரபல ஆண் விஞ்ஞானிகள் தங்களது உதவியாளர்களாக பெண் ஆய்வாளர்களை வைத்து கொண்டதும், கல்வி கற்கவும் வேலைக்கு அமர்த்தவுமே மறுக்கப்பட்ட பெண்கள் வர்க்கம் தங்களது கடுமையான பிடிவாதத்தாலும் போராட்டத்தாலும் தங்கள் மீதும் திணிக்கப்பட்ட தடை அரண்களையும் தாண்டி உலக வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்ததையும் சற்றும் குறைத்து எடை போட முடியாது.

சில முக்கிய பெண் விஞ்ஞானிகள்

1 . மேரி க்யூரி ( விஞ்ஞான உலகின் முடிசூடா ராணி. )
ரேடியம் என்னும் அற்புதத்தை உலகிற்கு வழங்கியவர்.
இருமுறை நோபல் பரிசு வென்றவர்.

2. மரியா - ஜூயஸ் ( பெண் அரிஸ்டாட்டில் )
புவியியல் விஞ்ஞானி , உலோகவியல் - குறிப்பாக தங்கம் - துறை வித்தகர்.

3. எம்மா பெர்ரிகார் ( நிறப்பிரிகையின் தாய் )
இயற்பியல் விஞ்ஞானி, நிரப்பிரிகைமானி கண்டுபிடித்தவர்.

4. ராச்சல் லூயிஸ் கர்சன் ( கடலின் ஒரே தோழி )
சுற்று சூழல் கடல் விஞ்ஞானி

5. ரோசலின்த் எல்ஸி ப்ராங்க்ளின் ( க்ளோனிங் ராணி )
மரபணு விஞ்ஞானி, டி. en. ஏ கண்டறிந்தவர்.

6 . கிரேஸ் முர்ரே ஹாப்பர் ( கம்ப்யூட்டரின் தாய் )
ஏராளமான கண்டுபிடிப்புகளை கணினி துறையில் நிகழ்த்தியவர்

7. ஜீலியட் க்யூரி .( நியூட்ரான் மங்கை )
நியூட்ரானை கண்டுபிடித்தவர்.

8. லிஸி மெய்ட்னர்
அணுவை துளைத்தவர்

9. மேரி ஏஞ்சல் பென்னிங்டன்
ஐஸ் ராணி

10 . டொரோத்தி மவுத் வ்ரின்ச்
பெண் ஜன்ஸ்டின்

11 . மரியா டெல்கஸ்
சூரிய மகாராணி

12 . சாரஹாஷி காட்சீக்கோ
கார்பன் பெண்மணி

13 . எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்
சுற்றுசூழலின் தாய்

14 . ஜெர்டி தெரசா ராட் நிட்ஸ் கோரி
என்சைம்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

15 . டொரோத்தி க்ரோக்புட் ஹாட்ஜ்சிங்
பென்சிலின் வைட்டமின் மற்றும் இன்சுலின் அமைப்பை அடைந்து காட்டியவர்.

16 . மேரி ஹெலன் ஜோன்ஸ்
யூரியாவை கண்டிபிடித்தவர்.

17 . டெசிரி லி பியூ
செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர்.

18 . மேரி ஜேன் ஆஸ்பர்ன்
புற்று நோய்க்கான சிகிச்சையை பரவலாக்கியவர்.

19 . ரீத்தா கிளார்க் கிங்
ராக்கெட்டின் எரிபொருளை கண்டுபிடித்தவர்.

20 . வாலண்டினா தெரஸ்கோவா
முதல் விண்வெளி மங்கை.

21 . பாலின் ராமர்ட் லூகாஸ்
இருநூறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தவர்.

22 . ரீத்தா லேவி மொன்டால்சின்
நரம்பியலின் தாய்

23 . லீன் அலெக்சாந்தர் மார்குளிஸ்
நுண்ணுயிரிகளின் சேவகி.

24 . லுக்ரேசியா கரோலின் ஹெர்சல்
வானியியல் விஞ்ஞானி

25 . சாலி கிரிஸ்டன் ரைடு
விண்வெளியில் பரந்த முதல் அமெரிக்க பெண்மணி

26 . டெட்சுகோ டெக்காபே
விவசாயத்தில் புதிய இலக்குகளை எட்டியவர்.

27 . பிளாரன்ஸ் ச்வாம்புகு
சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து சர்க்கரையை பிரித்தேடுத்தவர்

28 . ஷென்னான் டபிள்யூ லுசிட்
விண்வெளியில் ஒரு சாதனை நட்சத்திரம்

29 . ஹெலன் கால்டிகாட்
அணுஆயுத சோதனைகளால் குழந்தைகளுக்கு வரும் கேடுகளை நிருபித்தவர்.

30 . ஜெர்டு பில்லி எலியன் (டர்டி)
மருத்துவ ஆய்வின் முடிசூட ராணி.

31 . பார்பரா மேக்லிண்டாக்
மரபணுக்களின் ரகசியங்களை கண்டுபிடித்தவர்.

32 . கல்பனா சாவ்லா
இந்தியாவின் இதயத்துடிப்பு.