Wednesday, February 23, 2011

கும்பம் 11 - பெப்ரவரி 23 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் அம்ரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.

1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.

1887 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1893 - ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1903 - கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.

1904 - 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.

1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1917 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது.

1919 - இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.

1941 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.

1944 - செச்னிய மற்றும் இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.

1947 - அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது.

1966 - சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1991 - தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1997 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

1998 - மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1633 - சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி (இ. 1703)

1915 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர்

1924 - அலன் கோர்மாக், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர். (இ. 1998)

1965 - மைக்கேல் டெல், டெல் நிறுவனத்த்தை ஆரம்பித்தவர்.

1954 - ராஜினி திராணகம, இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும். (இ. 1989)

1983 - அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1503 - அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408)

1719 - சீகன் பால்க், ஜெர்மனிய மதகுரு (பி. 1682)

1821 - ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (பி. 1795)

1848 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1767

1855 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (பி. 1777)

1868 - டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க சமூக உரிமையாளர் (இ. 1963)

1973 - டிக்கின்சன் ரிச்சார்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர். (பி. 1895)

சிறப்பு நாள்

புரூணை - விடுதலை நாள் (1984)

கயானா - குடியரசு நாள் (1970)

Tuesday, February 22, 2011

கும்பம் 10 - பெப்ரவரி 22 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1495 - பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்ல்ஸ் நேப்பில்சை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.

1658 - டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.

1819 - ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.

1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.

1848 - பாரிசில், லூயி பிலிப் மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.

1853 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

1862 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1882 - சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.

1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது.

1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.

1943 - நாசி ஜெர்மனியில் வைட் ரோஸ் இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.

1948 - செக்கோசிலவாக்கியா கம்யூனிசப் புரட்சி இடம்பெற்றது.

1958 - எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

1961 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

1969 - பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.

1974 - சாமுவேல் பிக் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனைக் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1979 - சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

2002 - அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாஸ் சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

2002 - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.

2006 - பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

பிறப்புகள்

1732 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799)

1824 - பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (இ. 1907)

1857 - பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941)

1879 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1947)

1914 - ரெனாட்டோ டுல்பெக்கோ, உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்

1932 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (இ. 2009)

1936 - மைக்கேல் பிஷப், உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்

1938 - கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர், நாட்டுப்பற்றாளர் (இ. 1992)

1962 - ஸ்டீவ் இர்வின் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர் (இ. 2006)

1963 - விஜய் சிங், கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

1556 - ஹுமாயூன், முகலாயப் பேரரசன் (பி. 1508)

1944 - கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)

1987 - அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (பி. 1928)

2006 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)

சிறப்பு நாள்

சென் லூசியா - விடுதலை நாள் (1979)

புனித பேதுரு திருவிழா

Monday, February 21, 2011

கும்பம் 9- பெப்ரவரி 21 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1440 - புரூசியக் கூட்டமைப்பு உருவானது.

1613 - முதலாம் மிக்கையில் ரஷ்யாவின் சார் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

1804 - நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.

1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.

1907 - நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

1918 - கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்தது.

1937 - முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனல் போர் முடிவுக்கு வந்தது.

1947 - எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.

1952 - கிழக்கு பாகிஸ்தானின் டாக்காவில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.

1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.

1963 - லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1965 - மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1972 - சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.

1973 - சினாய் பாலைவனத்தில் இஸ்ரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பெர் கொல்லப்பட்டனர்.

1974 - சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.

பிறப்புகள்

1878 - அன்னை, இந்திய ஆன்மிகவாதி (இ. 1973)

1895 - கார்ல் பீட்டர் ஹென்ரிக் டாம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)

1907 - எம். ஆர். ராதா, நகைச்சுவை நடிகர் (இ. 1979)

1924 - ராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் முதலாவது அதிபர்

இறப்புகள்

1889 - இன்னாசித்தம்பி, யாழ்ப்பாணம் சில்லாலை புகழ்பெற்ற சுதேச வைத்தியர்

1926 - ஹெயிக் ஓனெஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர், (பி. 1853)

1941 - பிரெடெரிக் பாண்டிங், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1891)

1965 - மல்கம் எக்ஸ், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (பி. 1925)

1968 - ஹோவார்ட் ஃபுளோரி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)

1984 - மிகயில் ஷோலகொவ், நோபல் பரிசு பெற்ற இரசிய எழுத்தாளர், (பி. 1905)

1999 - கேர்ட்ரட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1918)

சிறப்பு நாள்

மொழிப்பற்றாளர் நாள் - வங்காள மொழி பேசுபவரினால் கொண்டாடப்படும் நாள்

அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ

Sunday, February 20, 2011

கும்பம் 8- பெப்ரவரி 20 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1547 - ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1627 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.

1798 - பாப்பரசர் ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1910 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டாக் தீவைக் கைப்பற்றியது.

1962 - மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

2002 - எகிப்தில் தொடருந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1876 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)

1937 - ரொபேர்ட் ஹியூபர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர்

1945 - ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்

1963 - சார்ல்ஸ் பார்க்லி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1977 - ஸ்டெஃபான் மார்பெரி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1896 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)

1907 - ஹென்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர், (பி. 1852)

1916 - கிளாஸ் ஆர்னல்ட்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1844)

1972 - மரீயா கோப்பர்ட்-மேயெர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர், (பி. 1906)

1976 - ரெனே காசின், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1887)

2008 - டி. ஜி. எஸ். தினகரன், கிறித்துவ மறைபரப்புனர் (பி. 1935)

2011 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்

Saturday, February 19, 2011

கும்பம் 7- பெப்ரவரி 19 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.

1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.

1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.

1942 - இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.

1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.

1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.

1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.

1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)

1833 - ஏலி டூக்கோமன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)

1855 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)

1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)

1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)

1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்

1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்

1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)

1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)

1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)

Friday, February 18, 2011

கும்பம் 6- பெப்ரவரி 18 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1229 - புனித ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பிரெடெரிக் எகிப்திய மன்னன் அல்-கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டான்.

1478 - இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்ட்டிற்கு எதிராக சதி முயற்சியில் இறங்கியதற்காக அவனது சகோதரன் ஜோர்ஜ் (கிளாரன்ஸ் இளவரசன்) தூக்கிலிடப்பட்டான்.

1797 - ட்ரினிடாட் பிரித்தானியர்களிடம் வீழ்ந்தது.

1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.

1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.

1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.

1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.

1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.

1957 - கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை
பெய்தது.

1991 - லண்டனில் தொடருந்து நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.

2003 - தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 - ஈரானில் இராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு தொடருந்தில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)

1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)

1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)

1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)

1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.

இறப்புகள்

1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)

1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)

1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904)

சிறப்பு நாள்

காம்பியா - விடுதலை நாள் (1965)

Thursday, February 17, 2011

கும்பம் 5- பெப்ரவரி 17 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1753 - சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது.

1788 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.

1854 - பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.

1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.

1881 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.

1890 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.

1933 - நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

1947 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.

1957 - மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - மேற்கு ஜெர்மனியின் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ர புயலில் 300 பேருக்கு எல் கொல்லப்பட்டனர்.

1979 - மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.

1990 - இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1996 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.

2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

2006 - பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.

பிறப்புகள்

1888 - ஓட்டோ ஸ்டேர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (இ. 1969)

1927 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (இ. 2009)

1984 - சதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1956 - எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)

1970 - ஷ்மூவெல் யோசெப் ஆக்னன், நோபல் பரிசு பெற்ற இசுரேல் எழுத்தாளர், (பி. 1888)

1986 - ஜே. கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் (பி. 1895)

Wednesday, February 16, 2011

கும்பம் 4- பெப்ரவரி 16 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1646 - இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.

1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.

1838 - தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.

1918 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.

1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.

1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.

1961 - எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.

1983 - ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1986 - சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.

1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

பிறப்புகள்

1934 - தெளிவத்தை ஜோசப், ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர்.

இறப்புகள்

1656 - தத்துவ போதக சுவாமிகள் (றொபேட் டீ நொபிலி), ரோமைச் சேர்ந்த கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)

1885 - வீ. இராமலிங்கம், ஈழத்துப் புலவர்.

1907 - ஜியோசு கார்டூச்சி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1835)

1932 - பெர்டினண்ட் புயிசோன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1841)

1944 - தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)

1954 - டி. கே. சிதம்பரநாதன், இரசிகமணி

1988 - விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)

சிறப்பு நாள்

லித்துவேனியா - விடுதலை நாள் (1918)

Tuesday, February 15, 2011

கும்பம் 3- பெப்ரவரி 15 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

590 - பாரசீகத்தின்வின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான்.

1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.

1898 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.

1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1950 - சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1961 - பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.

1970 - டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1996 - சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

1999 - குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
2005 - யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்1564 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642)

1845 - எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937)

1861 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (இ. 1947)

1861 - சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938)

1873 - ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964)

1922 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி

1949 - அனுரா பண்டாரநாயக்கா, இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)

1956 - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர்.

1984 - மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1973 - அழகு சுப்பிரமணியம், ஆங்கில எழுத்தாளர், இலங்கையர். (பி. 1915)

1988 - ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918)
1999 - ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926)

Monday, February 14, 2011

கும்பம் 2- பெப்ரவரி 14 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1349 - பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1779 - ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.

1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.

1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1879 - சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.

1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.

1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

1919 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.

1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.

1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.

1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1966 - அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.

1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.

1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

1989 - சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.

1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.

1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005 - பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1483 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)

1869 - சார்ல்ஸ் வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், (இ. 1959)

1917 - ஹேர்பேர்ட் ஹோப்ட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர்

இறப்புகள்

1779 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)

1968 - அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)


சிறப்பு நாள்

காதலர் தினம்

Sunday, February 13, 2011

கும்பம் 1- பெப்ரவரி 13 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1258 - பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.

1668 - ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.

1755 - ஜாவாவின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1880 - எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.

1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.

1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.

1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.

1974 - நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

1975 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.

1978 - சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.

1985 - கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1879 - சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1949)

1910 - வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)

1920 அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)

இறப்புகள்

1950 - செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (பி. 1874)

2009 - கிருத்திகா, தமிழக எழுத்தாளர்

Saturday, February 12, 2011

சுறவம் 29- பெப்ரவரி 12 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

55 - ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.

1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

1733 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.

1771 - சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.

1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1832 - கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.

1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

1873 - எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.

1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.

1912 - சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

1927 - முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.

1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.

1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.

2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

2002 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.

2002 - ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1809 - சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)

1809 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)

1918 - ஜூலீயன் ஷ்விங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1994)

1967 - என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்

இறப்புகள்

1804 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)

1908 - ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)

2009 - புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்

2009 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)

சிறப்பு நாள்

டார்வின் நாள்

Friday, February 11, 2011

சுறவம் 28- பெப்ரவரி 11 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.

55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.

1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.

1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.

1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.

1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.

1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.

1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.

1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.

1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.

1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.

1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.

1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.

1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.

1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.

1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

பிறப்புகள்

1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)

1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)

1924 - வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989)

1964 - சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்

இறப்புகள்

1650 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (பி. 1596)

1693 - ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)

1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)

1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)

1948 - செர்கீ ஐசென்ஸ்டைன், ரஷ்யத் திரைப்பட இயக்குனர் (பி. 1898)

1973 - ஹான்ஸ் ஜென்சன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1907)

19?? - சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி

1978 - ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)

1991 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)

2006 - பெக்கி கிரிப்ஸ் அப்பையா, எழுத்தாளர் (பி. 1921)

2007 - சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975)

சிறப்பு நாள்

ஜப்பான் - நிறுவன நாள்

ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)

கமரூன் - இளைஞர் நாள்

ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்

பொஸ்னியா - விடுதலை நாள்

வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)

Thursday, February 10, 2011

சுறவம் 27- பெப்ரவரி 10 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1355 - இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1763 - பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.

1798 - லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.

1815 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.

1846 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.

1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.

1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).

1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

1914 - யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.

1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.

1964 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.

1991 - வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1996 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

பிறப்புகள்

1887 - ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)

1890 - போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)

1902 - வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)

1910 - ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)

இறப்புகள்

1837 - அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)

1912 - ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)

1918 - ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)

1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)

Wednesday, February 9, 2011

சுறவம் 26- பெப்ரவரி 9 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1822 - ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.

1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.

1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.

1897 - பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1900 - இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.

1904 - போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.

1942 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1962 - பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது.

1965 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

1969 - போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.

1971 - கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.

1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.

1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

1991 - லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

1996 - ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1773 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)

1910 - ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)

1940 - ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்

1943 - ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1970 - கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

1979 - சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1881 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, இரசிய நாவலாசிரியர் (பி. 1821)

1977 - ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)

1979 - டெனிஸ் காபோர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)

1984 - யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)

1994 - ஹ்வார்ட் டெமின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1934)

2001 - ஹேர்பேர்ட் சைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1916)

Tuesday, February 8, 2011

சுறவம் 25 - பெப்ரவரி 8 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.

1622 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.

1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1974 - அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1989 - போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில்
மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
பிறப்புகள்

1700 - டானியல் பேர்னோலி, கணிதவியலாளர் (இ. 1782)

1828 - ஜூல்ஸ் வேர்ன், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1905)

1834 - திமீத்ரி மெண்டெலீவ், இரசிய வேதியியலாளர் (இ. 1907)

1897 - ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)

1963 - மொகமட் அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் துடுப்பாளர்

இறப்புகள்

1804 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பி. 1733)

1889 - சொலமன் ஜோன்பிள்ளை, எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் பத்திரிகையின் ஆசிரியர்

1975 - ரொபர்ட் ரொபின்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)

1993 - நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)

2005 - அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.

சிறப்பு நாள்

பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்

Monday, February 7, 2011

சுறவம் 24 - பெப்ரவரி 7 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1238 - மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.

1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.

1845 - Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.

1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.

1962 - கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தாது.

1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.

1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.

1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.

1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.

1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.

1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.

1991 - ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.

1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.

2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்

1812 - சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870)

1902 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)

1905 - ஊல்ஃப் வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1983)

1965 - கிரிஸ் ராக், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், நடிகர்

1974 - ஸ்டீவ் நேஷ், கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1919 - ஹென்றி யூலன், யாழ்ப்பாண ஆயர்.

1937 - எலிஹூ ரூட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)

2008 - குணால், திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

கிரனாடா - விடுதலை நாள் (1974)

Sunday, February 6, 2011

சுறவம் 23 - பெப்ரவரி 6 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1658 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.

1840 - நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது.

1863 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

1938 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.

1951 - நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1952 - இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.

1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.

1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.

2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1465 - டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)

1892 - வில்லியம் மேர்ஃபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1987)

1911 - ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)

1912 - இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)

1945 - பாப் மார்லி, யமேக்கா பாடகர் (இ. 1981)

1983 - ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் வீரர்

இறப்புகள்

1827 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)

1931 - மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் பி. 1861)

1952 - ஆறாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1895)

1985 - ஜேம்ஸ் சேஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1906)

1991 - சல்வடோர் லூரியா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)

2002 - மாக்ஸ் புருட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)

Saturday, February 5, 2011

சுறவம் 22- பெப்ரவரி 5 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

62 – இத்தாலியின் பொம்பெய் நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.

1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.

1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.

1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.

1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.

1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.

1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.

1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

பிறப்புகள்

1914 - அலன் ஹொட்ஜ்கீன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1998)

1915 - ராபர்ட் ஹொஃப்ஸ்டாட்டர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1990)

1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்

இறப்புகள்

1898 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழ் அறிஞர் (பி. 1838)

1999 - வசீலி லியோன்டியெஃப், நோபல் பரிசு பெற்ற ரசியப் பொருளியலாளர் (பி. 1906)

2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)

சிறப்பு நாள்

பாகிஸ்தான் - காஷ்மீர் நாள்

Friday, February 4, 2011

சுறவம் 21 - பெப்ரவரி 4 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1783 - ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.

1810 - கரிபியன் தீவுகளான குவாட்லூப் (Guadeloupe) பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

1834 - இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.

1859 - கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1899 - பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.

1932 - இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது.

1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.

1948 - இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1957 - திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

1966 - ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.

1969 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.

1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.

1978 - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.

1997 - இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

2003 - யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக "சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ" எனப் பெயர் மாற்றம் பெற்றது.

2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

2007 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பிறப்புகள்

1913 - றோசா பாக்ஸ், ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (இ. 2005)

1921 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005)

இறப்புகள்

1747 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)

1928 - ஹெண்ட்ரிக் லோரெண்ட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1853)

1974 - சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894)

சிறப்பு நாள்

இலங்கை - விடுதலை நாள் (1948)

Thursday, February 3, 2011

சுறவம் 20- பெப்ரவரி 3 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

301 - சீனாவில் சீமா லுன் ஜின் ஆட்சியைக் கைப்பற்றினான்.

1377 - இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.

1690 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

1807 - பிரித்தானியப் படைகள் சர் சாமுவேல் ஓஷ்முட்டி தலைமையில் உருகுவேயின் தலைநகர் மொண்டெவிடியோவைக் கைப்பற்றினர்.

1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1916 - கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது.

1919 - சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன.

1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

1931 - நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் கொல்லப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா மார்ஷல் தீவுகளைக் கைப்பற்றியது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.

1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

1969 - யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.

1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

1989 - பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார்.

2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

பிறப்புகள்

1898 - அல்வார் ஆல்ட்டோ, கட்டிடக் கலைஞர் (இ. 1976)

1948 - கார்லொஸ் பெலோ, நோபல் பரிசு பெற்ற கிழக்கு திமோர் அரசியல்வாதி

1976 - ஜெ. ராம்கி, எழுத்தாளர்

இறப்புகள்

1855 - டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்

1915 - யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)

1924 - வூட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1856)

1969 - சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)

2005 - எர்ணஸ்ட் மாயர், உயிரியலாளர் (பி. 1904)

Wednesday, February 2, 2011

சுறவம் 19 - பெப்ரவரி 2 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.

1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.

1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.

1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.

1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.

1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.

1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.

1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.

1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.

1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1998 - பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1522] - லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)

1871 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)

1882 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)

1924 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)

1977 - ஷக்கீரா, கொலம்பியப் பாடகி

1985 - உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1907 - திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)

1970 - பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)

1980 - வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

1987 - அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)

சிறப்பு நாள்

உலக சதுப்பு நில நாள்

Tuesday, February 1, 2011

சுறவம் 18 - பெப்ரவரி 1 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.

1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.

1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.

1864 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.

1880 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.

1884 - ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.

1893 - தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.

1908 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர்.

1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.

1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1924 - சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1946 - நோர்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1958 - எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.

1974 - பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

1979 - 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார்.

1998 - கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.

2003 - கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

2005 - கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.

2007 - மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1905 - எமிலியோ செக்ரே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1989)

1931 - போரிஸ் யெல்ட்சின், ரஷ்ய முன்னாள் அதிபர் (இ. 2007)

இறப்புகள்

1958 - கிளிண்டன் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1888)
1964 - பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்துறையின் முன்னோடி (பி. 1873)
1976 - வேர்னர் ஐசன்பேர்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1901)
1976 - ஜோர்ஜ் விப்பிள், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1878)
1986 - அல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1902)
2003 - கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (பி. 1961)
சிறப்பு நாள்
ஐக்கிய அமெரிக்கா - கறுப்பின வரலாறு மாதம் ஆரம்பம்