Friday, July 23, 2010

ஜூலை 23 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.

1793 - புரூசியர்கள் ஜெர்மனியின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.

1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1840 - கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1874 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து ஜூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.

1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.

1952 - எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார்.

1961 - நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.

1962 - லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.

1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

1970 - ஓமானின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.

1983 - திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.

1988 - பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.

1992 - ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.

1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

1999 - சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

பிறப்புகள்

1856 - லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)

1892 - முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (இ. 1975)

1975 - சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர்

1984 - பிரான்டன் ராய், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1885 - யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்க அரசுத் தலைவர் (பி. 1822)

1916 - சேர் வில்லியம் ராம்சி, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி. 1852)

1925 - சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)

1989 - தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்

1957 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)

சிறப்பு நாள்

எகிப்து - புரட்சி நாள் (1952)

லிபியா - புரட்சி நாள்

பப்புவா நியூ கினி - நினைவு நாள்

மாவீரன் செல்லக்கிளி வீரசாவு



தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்தே அதன் உறுப்பினரைத் திகழ்ந்தவர் செல்லக்கிளி. பின்வரும் நிகழ்ச்சி அவரது வீரத்தைப் பறைசாற்றும்.

தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்த கனகரத்தினம் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் 1978 -ஆம் ஆண்டு கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டார். அக்கொலையில் உமா மகேசுவரன் தொடர்புடையவரென்று, அவரையும் பிற கொலையாளிகளையும் கண்டுபிடிக்க திறமைமிக்கவர் எனக் கருதப்பட்ட பாசுதியாம் என்னும் புலைவுதுரை சிறப்பு அலுவலர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

7 .04 .1978 அன்று உமா மகேசுவரன் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் என்ற இடத்தில் தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார். காட்டு பகுதியில் ஒரு மரத்தின் படர்ந்த கிளைகளில் நின்றுகொண்டு பயிற்சியை வலி நடத்திக் கொண்டிருந்தார். பயிற்சி பெற்றுகொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் செல்லக்கிளி ஆவார். அப்போது பாசுதியாம் என்பவரும் சில காவலர்களும் கொலையாளியை தேடிக்கொண்டே அந்த இடம் வந்தடைந்தனர். மரத்தின் மேலே நின்றுகொண்டிருந்த உமா மகேசுவரனை கவனிக்கவில்லை.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவர் தங்களை வேளாண்மை பணியாளர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, விருந்தினருக்கு தண்ணீர் கொடுத்து விருந்தோம்பல் செய்யும்படி தன உடன் தோழரிடம் சொன்னார். அவ்வாறே இளைஞர்களில் ஒருவர் தண்ணீர் கொடுக்க, பாசுதியாமும் பிறரும் துப்பாக்கிகளைக் கீழே வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க முற்பட்ட இமைப் பொழுதில் செல்லக்கிளி செயல்பட்டு, மின்னல் வேகத்தில் பாசுதியாம் என்பவரின் எந்திர துப்பாக்கியை எடுத்து அவர்களை தாக்கினார். நொடிபொழுதில் வந்தவர்கள் பிணமாய் சாய்ந்தனர். செள்ளகிளியின் நுண்ணறிவினாலும் துனிச்சலாலும் நடந்த இந்தத்தாக்குதல் சிங்கள அரசுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்து 1983 -ஆம் ஆண்டுத் தேர்தலின்போது சீலனுடன் சேர்ந்து மற்றொரு தாக்குதலில் பங்கெடுத்தார். அரசு அறிவித்திருந்த மாவட்ட மன்றத்துக்கான தேர்தலைப் புறக்கணிக்கும்படி புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி 90 % தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். மேலும் வாக்கு பதிவுறும் நேரத்தில் செல்லக்கிளி மற்றும் சீலன் குழுவினர் ஒரு வாக்கு பதிவு அறை மீது தாக்குதல் நடத்தி வாக்குபதிவை சீர்குலைத்தனர். செல்லக்கிளி காவலர்களிடம் போர்க்கருவிகளை கைப்பற்றினார்.

15 .07 .1983 அன்று அரசுப்படையால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சீலன் என்ற சார்லசு லூகாசு ஆண்டனி இறந்து போனான். அவரது இறப்புக்கு பழி வாங்கும் நோக்கில் தாக்குதல் ஒன்றைச் செல்லக்கிளி திட்டமிட்டார். தாக்குதலுக்கான இடத்தையும் திட்டத்தையும் ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டதோடு, பிரபாகரனே தலைமையேற்று இத்தாக்குதலை நடத்த முடிவெடுத்தார். இத்தாக்குதலில் கிட்டு, செல்லக்கிளி, விக்டர், ஐயர், புலேந்திரன், சந்தோசம் போன்ற முன்னணி வீரர்களும் இருந்தனர்.

சீலனுக்கு பிறகு அரசுப்படை செல்லக்கிளி மீது குறிவைத்துக் காத்திருந்தது. 23 .07 .83 அன்று 15 படை வீரர்கள் குருநகர் முகாமிலிருந்து இரண்டு ஊர்திகளில் புறப்பட்டனர். இரவு 11 .28 -க்கு உரும்பிராய் எனும் ஊரை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் செய்தி அனுப்பினர். போர் ஊர்தி திருநெல்வேலி என்ற இடத்தை அடைந்த பொது புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. ஒரு ஊர்தி காற்றில் பறந்தது. காத்திருந்த புலிகள் அரசுப் படையினர் மீது தாக்குதல் நடத்தி 13 வீரர்களை கொன்று அவர்களின் போர்க் கருவிகளை கைப்பற்றினர்.



தாக்குதல் முடிந்ததும் பிரபாகரனைச் சூழ்ந்து நின்று கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது செல்லக்கிளி காணவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விக்டர் தாக்குதலுக்காக பதுங்கியிருந்த இடம் நோக்கி ஓடினார். அங்கே நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் மாவீரனாய் மடிந்து போயிருந்தார் செல்லக்கிளி.

அரசு படை வந்து விடலாம் என்ற சூழலில் கைப்பற்றிய போர்க்கருவிகளையும் செல்லக்கிளி உடலையும் எடுத்துகொண்டு அவ்விடத்தை விட்டு சென்றனர். செல்லக்கிளியை அருகிலேயே அடக்கம் செய்தனர். அவர்களின் கமுக்கமான மறைவிடைத்தை அடைந்ததும் பிரபாகரன் அழத்தொடங்கினார்.பிரபாகரன் அழுவதை முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் அன்றுதான் பார்த்தேன் என்று பின்னாளில் கிட்டு குறிப்பிடுகிறார். செல்லக்கிளியின் இறப்பு புலிகள் இயக்கத்திற்கு பேரிழப்பு.

தாமிரபரணி படுகொலை



தாமிரபரணி படுகொலை ஒலி ஒளி காட்சிகள்
http://meenakam.com/tamilvideo/?p=285

"வாழுரிமை" ஒவ்வொரு மனிதப் பிறவியின் இயல்பான உரிமை. அதை மறப்பதும், மறுப்பதும் மனித உரிமை மீறல் ஆகும். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய இம்மூன்றையும் இச்சமூகம் அளிக்க கடமைப்பட்டுள்ளது. இது மறுக்கப்படும்போது மனித உரிமை மீறலாக மாறுகிறது. இதற்கு எதிராக குரலெழுப்ப ஒவ்வொருவனுக்கும் உரிமை உண்டு. இந்த குரலுக்கு பதில் கிடைத்துள்ளதா எனப் பார்த்தால் இல்லையென்றே கூறலாம். எப்போதெல்லாம் எங்கெல்லாம் மனித உரிமைக்காக குரல் எழுப்பப்படுகிறதோ அங்கெல்லாம் அடக்கு முறைகள்தான் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது வரலாறு கூறும் உண்மை.

இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் மாஞ்சோலை தேயிலைதொட்ட தொழிலாளர்கள். இவர்கள் கொத்தடிமைகளாகவும், அதிக நேர வேலைக்காரர்களாகவும், குறைந்த கூலிகளாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்பட்டு வந்தார்கள்.
இவர்களை கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்டெடுத்து, மாஞ்சோலை தேயிளிதொட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தி, உரிய நன்மையை அங்குள்ள தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும். என்ற கோரிக்கையை தொல்தமிழர் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும், சில அரசியல் கட்சிகளும் முன்வைத்தன. அதை அரசு புறக்கணித்தது. தேயிலை தொட்ட முதலாளிகளால் ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். இதை உணர்ந்து மக்கள் தொடர்ந்து போராடினர்.

இறுதியாக 09 .06 .1999 அன்று திருநேல்வேல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தர்ணா ஒன்று நடத்தினர். அப்போது அதில் கலந்துகொண்ட 169 பெண்கள் உட்பட 652 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி சூலை 23 -ஆம் நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கென சிலரை அழைத்துச் சென்றனர். திடீரென காவல்துறை மக்களை தடயடி நடத்திக் கலைத்தது. கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கி சூடு, கல் வீச்சுகள் போன்ற ஆயுதங்களின் மூலமாக தாக்கப்பட்டனர். தங்களை காப்பாற்றிக்கொள்ள தாமிரபரணியில் இறங்கி ஓட ஆரம்பித்தனர். ஆற்றிலும் அவர்களை துரத்தி அடித்தும் ஆற்றிலிருந்து பலரை வெளியேற விடாமல் மூல்கடித்தும் மக்கள் மீது வன்முறையை ஏவினர். பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தனர்.

இதற்கான நீதி இன்று வரை இல்லை. இவை எல்லாம் நாம் எப்படிப்பட்ட அரசியல் அமைப்பில் வாழ்கிறோம்? மனித உரிமை மீறலில் இச்சமூகம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரிகிறது.

ஜூலை 22 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1499 - புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

1587 - வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர்.

1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.

1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1933 - வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

1962 - நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

2009 - சூரிய கிரகணம், 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

பிறப்புகள்

1923 - முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)

1983 - நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1832 - இரண்டாம் நெப்போலியன், பிரான்சின் பேரரசன் (பி. 1811)

சிறப்பு நாள்

அண்ணளவு நாள்
மர்தலேன் மரியாள் திருவிழா நாள்

நிலவில் மாந்தர்




புவியிலிருந்து இரு நூற்று ஐம்பதாயிரம் கல் தொலைவில் உள்ள நிலவில் 22 .07 .1969 அன்று ஆம்சுட்ராங்கும் அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் காலடி எடுத்து வைத்து அமெரிக்க மேலாண்மைக் கோடியை நாட்டினர். 21 மணி, 36 நிமிடம், 21 நொடி நிலவில் உலவினர். 48 .5 பவுண்டு எடை நிலவுகள், மண் ஆகியவற்றோடு பூவுலகத்திற்குத் திரும்பினர்.
இவர்கள் பயணம் செய்த ''அப்பல்லோ 11 " என்ற வின்கலத்தைத் தொடர்ந்து பல விண்கலங்கள் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1970 -ஆம் ஆண்டு செப்டம்பர் 12 -ஆம் நாள் ரஷ்யா லூனா 16 என்ற ஆளில்லா விண்ணூர்தியை அனுப்பி நிலவில் மண்ணை எடுத்து வர செய்தது. பின்னர் லூனா 17 -ஐ நிலவுக்கு அனுப்பி எட்டு சக்கர எந்திர வண்டியை இறக்கி நிலவுத் தரையின் இயல்புகளை ரசிய அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
இவ்வாறு நிலவிலும். கதிரவனை சுற்றி சுழலும் கோள்களிலும் மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள் தொடர்கின்றன. இத்தகைய முயற்சிகள் மாந்தரின் சாதனை மற்றும் மாந்த நலனை முன்னிறுத்தும் முயற்சி என்ற நிலையைக் கடந்து, மேலாண்மை செய்யும் முதல் உலக நாடுகளின் முற்றான்மை முயற்சிகளில் இதுவும் ஒன்றாகியுள்ளது.



புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிந்து ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் கொலம்பசு, வாஸ்கோடகாமா போன்றோர் பயணங்கள் மேற்கொண்டனர். பேரழிவை ஏற்படுத்தும் அணுகுண்டு போன்ற படைக்கருவிகளை தமது நாடுகளில் வைத்தால் அழிவு ஏற்படலாம் என்பதால் பிற கோள்களைப் படைக்கருவி கிடங்க்குளாக மாற்றி அங்கிருந்தே தாக்குதல் நடத்தும் உள்நோக்கமும் வின்வேளிப்பயனங்களில் ஒளிந்துள்ளது.

இவ்வாறு இயற்கையை பிற நாடுகளை பிறகொள்களை அடிமைப்படுத்தும் மேலாண்மை மனப்பான்மையை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராட வேண்டும்

ஆம்சுட்ராங்கும் அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவுக்கு சென்று வந்ததை பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுகொண்டார்கள். என்றாலும் இன்று ஜெர்மானியர்கள் கேட்கும் கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறது......
கேள்வி இதுதான்.
1 , நிலாவில் காற்று இல்லை ஆனால் கோடி பறக்கிறது எப்படி?

2, சூரியனும் இல்லை, நிலாவில் தான் அவர்கள் இருக்கிறார்கள் ஆனால் நிழல் எப்படி வந்தது?

ஜூலை 21 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.

1718 - ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.

1774 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது).

1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.

1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

1972 - வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

1977 - நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

பிறப்புகள்

1899 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

இறப்புகள்

1899 - சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)

1998 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (பி. 1923)

2001 - சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

2009 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)

சிறப்பு நாள்

பெல்ஜியம் - தேசிய நாள்

பொலீவியா - மாவீரர் நாள்

குவாம் - விடுதலை நாள் (1944)

சிங்கப்பூர் - இன சமத்துவ நாள்



வேதநாயகம் இறப்பு.
தமிழும், தமிழ்நாடும் உயர்ந்த நிலையிலே வாழவேண்டும் என்னும் நோக்கம் கொண்டு உழைத்தவரும், பெண்கள்விக்காகவும், பெண்களின் பெருமைக்காகவும் தமிழகத்திலே முதலாவதாக தொண்டு செய்தவருமான வேதநாயகம் திருச்சி அருகில் உள்ள குளத்தூரில் 1826 -ஆம் ஆண்டு பிறந்தார். சவரிமுத்து, ஆரோக்கியமரியம்மாள் என்பவர்கள் இவரது பெற்றோர். இவர் மாயூரம் "நீதிபதி வேதநாயகம்" என்றும் அழைக்கப்பட்டார். 21 .07 .1889 -இல் உயிர் துறந்தார்.

"வடமொழி கற்றால் மறுமைக்கு நலம், ஆங்கிலம் படித்தால் இம்மைக்கு நலம்" என்பது நண்பிக்கையாக நிலவிய அந்நாளில் தமிழை ஊன்றிக் கற்று தனது 11 -வது அகைவையிலேயே தமிழில் புலமை பெற்றார். பா புனைவதிலும் தேர்ச்சி பெற்றார். ஆங்கில் உள்பட பல மொழிகளையும் பயின்றார்.

அக்காலத்தில். தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு இடமில்லாமல் இருந்தது. தெளுங்கிசையே பொது மேடையில் ஆட்சி புரிந்தது. தமிழிசையை வளர்க்கவேண்டுமேன்ரும், அறமும் இறைப்பற்று உறுதியும் கற்பிக்க வேண்டுமென்றும் விரும்பிய வதனயகம் "சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்" என்னும் இசை நூலை 1878 -ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

மாவட்ட நீதிமன்றத் தலைவர் அலுவலுக்கான தேர்வில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று 1857 -ஆம் ஆண்டில் தரங்கம்பாடியுலும், 1859 -இல் சீர்காளியுளும், 1860 -இல்மாயூரத்திலும் மாவட்ட நடுவராகப் பணியாற்றினார். 1873 -இல் ஓய்வு பெற்றார்.

நீதி துறையிலும், இலக்கியத்துறையிலும் தமிழுலகின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். வழக்குமன்றத்தில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தார். தமிழ் மொழியில் "நாவல்" என்னும் பினைக்கதையை முதன்முதலில் எழுதியவர் இவரே ஆவர். ஒளவையின் "தையல் சொல் கேளேல்" எனும் பழமொழி உள்பட பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகளை நீக்குதல் நலம் என்றார் வேதநாயகம்.

தமிழ் மீது ஆர்வம் கொண்டு உழைத்தவர் என்ற போதிலும் இவரது எழுத்துக்களில் அயல் மொழிச் சொற்களின் கலப்பு மிக அதிகமாகவே காணப்படுகிறது. சமற்கிருதக் கலப்பு திணிக்கப்பட்ட காலக்கட்டத்தில் தூய தமிழ் வளர்க்கும் எண்ணம் கொண்டிராத குறையாகவே தூருகிறது. நல்லெண்ணத்தோடு அவர் தொடங்கிய சில நற்பணிகள் திறன் ஆய்வுகளோடு தொடரப்பட வேண்டும்

ஜூலை 20 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1304 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் ஸ்டேர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினான்.

1618 - புளூட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.

1656 - பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவ் மன்னனின் சுவீடனின் படைகள் வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து-லித்துவேனியப் படைகளை வென்றனர்.

1810 - நியூகிரனாடாவின் பகோட்டா (கொலம்பியாவின் தலைநகர்) நகர மக்கள் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

1871 - பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

1917 - முதலாம் உலகப் போர்: யூகொஸ்லாவிய இராச்சியம் உருவாக்கப்பட்டது.

1922 - பன்னாட்டு அமைப்பு (League of Nations) ஆபிரிக்காவில் டோகோலாந்து பிரான்சுக்கும், தங்கனீக்கா ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.

1924 - அமெரிக்க உதவி தூதுவர் "ரொபேர்ட் இம்ரி" சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் தெஹ்ரான் நகரில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1935 - இந்தியாவில் லாகூரில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

1940 - டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஒருவனால் ஹிட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பித்தார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாம் தீவை அடைந்தன.

1947 - பர்மியப் பிரதமர் ஓங் சான் மற்றும் 7 அமைச்சர்கள் கொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஊ சோ கைது செய்யப்பட்டார்.

1948 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 தலைவர்கள் நியூயோர்க் நகரில் கைது செய்யப்பட்டனர்.

1949 - 19-மாதப் போரின் பின்னர் இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.

1951 - ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1953 - யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது.

1954 - வியட்நாமை இரண்டாகாப் பிரிக்கும் உடன்பாடு ஜெனீவாவில் எட்டப்பட்டது.

1960 -இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் தலைவராகத் தெரிவான முதற் பெண் ஆவார்.

1960 - கொங்கோவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த பெல்ஜியம் ஐநா பாதுகாப்பு அவையில் வாதாடியது. கொங்கோ அரசு சோவியத் உதவியை நாடியது.

1962 - கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

1964 - வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் "காய் பே" நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 30 குடிமக்களையும் கொன்றனர்.

1969 - அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் காலடி வைத்தனர்.

1969 - உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கொந்துராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1974 - சைப்பிரசில் அதிபர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.

1976 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தாய்லாந்தில் இருந்து முற்றாக வெளியேறினர்.

1976 - வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.

1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1980 - இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

1982 - ஐரியக் குடியரசு இராணுவத்தினரினால் லண்டனில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொது மக்கள் படுகாயமடைந்தனர்.

1989 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1996 - ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

1999 - குஜராத் கலவரங்கள்

பிறப்புகள்

கிமு 356 - மகா அலெக்சாந்தர், கிரேக்க மன்னன் (இ. கிமு 323)

1822 - கிரிகோர் ஜோஹன் மெண்டல், ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் (இ. 1884)

1919 - சேர் எட்மண்ட் ஹில்லறி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர், நியூசிலாந்தின் மலையேறி

1929 - ராஜேந்திர குமார், இந்திய நடிகர் (இ. 1999)

1975 - ரே ஏலன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1937 - மார்க்கோனி, வானொலியைக் கண்டுபிடித்தவர் (பி. 1874

1973 - புரூஸ் லீ, தற்காப்புக்கலை வல்லுநர், ஹாலிவுட் நடிகர் (பி. 1940)

சிறப்பு நாள்

அனைத்துலக சதுரங்க நாள்

கொலம்பியா - விடுதலை நாள் (1810)

வடக்கு சைப்பிரஸ் - அமைதி மற்றும் விடுதலை நாள்

குஜராத் கலவரங்கள் 1999



இசுலாமியரின் பக்ரீத் விழாவும், சைனர்களது மகாவீர் செயந்தியும் ஒரே நாளில் வருவதை பயன்படுத்திக் கொண்டு ஆமதாபாத் வட்டாரத்தில் கலகங்களைத் தூண்டி விடுகின்ற முயற்சிகளில் விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங்க்தளம் ஆகிய அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டன. இசுமியர்களை சினமூட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளின் வழியாக மதவேரிஎற்றும் தேர் ரத யாத்திரை நடத்தின.



இசுலாமியருடைய வீடுகள் தாக்கப்பட்டுச் சூறையாடப்பட்டன. இசுலாம் பெரியவர்கள் தங்கள் இளைஞர்களிடம் அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்து கொண்டே இருந்தனர். பதட்டங்களை அதிகரிக்கச் செய்வதில் செய்தி ஏடுகளும் பங்கெடுத்தன. காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதிக் குழுக்கள் செயல்படவே இல்லை.இருதரப்பு மக்களிடையே நேர்மையான உறவுகளை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு நிலவிய குழப்பங்களைக் கொலைவெறியர் தங்களுக்குச் சார்பாக பயன்படுத்தி கொண்டனர்.



இதன் விளைவு மிகப்பெரிய கலவரம், 1999 சூலை 20 -ஆம் நாள் ஆமதாபாத்தில் தொடங்கிய விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங்க்தளத்தின் வெறியாட்டம் ஆர்.எசு.எசு, சிவாசென போன்ற மதவெறி அமைப்புக்களின் உதவியோடு குசராத்தின் பலபகுதிகளிலும் இந்திய துனைகண்டத்தில் பிற சமயத்தவர் வாழும் இடங்களிலும் தொடர்ந்தன.



2002 -இல் நடந்த கோத்ரா தொடர்வண்டி எரிப்பும், அதை தொடர்ந்து இசுலாமியர்கள் மேல் திட்டமிட்டு ஏவப்பட்ட வன்முறைகளும் இவையெல்லாம் நடந்தும் கூட நரேந்திரமோடி குசராத்தில் மீஎண்டுமாட்சி பீடம் எரிய நிகழ்வு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல நாடும், மக்களாட்சியும், உரிமையும் சிதைக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகிறது.
விடிவுக்கான தேடலில் இன்று நாம் இறங்குவோம்.

ஜூலை 19 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1545 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.

1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.

1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.

1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.

1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.

1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.

1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.

1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.

1985 - இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.

1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.

1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

பிறப்புகள்

1827 - மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)

1893 - விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)

1938 - ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்

1979 - தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்

1979 - மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை

இறப்புகள்



1947 - சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)

1947 - ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915)

1987 - ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)

சிறப்பு நாள்

மியான்மார் - பர்மிய மாவீரர் நாள்

நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)


விபுலானந்த அடிகள் இறப்பு



"நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி மக்கள் ஊர்களுக்கு வெளியில் கவனிப்பாரற்ற நிலையில், கல்வி, நலவாழ்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருக்கும் வரையில் இந்திய சமூகம் முன்னேற முடியாது" என்று முழங்கியவர் விபுலானந்த அடிகள் ஆவர்.

இவர், இலங்கையில் மட்டகளப்பு மாவட்டம் கரைத்தீவு என்ற சிற்றூரில் 26 .03 .1852 -இல் பிறந்தார். இவரது தாயர் கண்ணம்மையார். தந்தை சாமித்தம்பியார் என்பவர்கள் ஆவர். இவர் இளமையில் இலங்கையிலும் அதன் பின்னர் வட இந்தியாவிலும் தமிழகத்திலும் வாழ்ந்தார்.

ஈழத்தமிழரான இவர் தாய்தமிழைக் கசடறக் கற்றார். தாய்மொழி வளர்ச்சி கருதி தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல அறிய உரைவீச்சுகளை வழங்கி தமிழை வளர்த்துள்ளார். தனது ஆய்வு அறிவை அதிகமாக கலைத்துறையில் அதிலும் குறிப்பாக இசைத்துறையில் பயன்படுத்தியுள்ளார்.

தமிழ் இசையையும், மேற்கத்திய இசையும் இணைத்தும், பிரித்தும் அவற்றின் தன்மைகளை விளக்கியும் 12 -க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1930 முதல் தமிழ் இசையில் கவனம் செலுத்திச் சங்க கால இசைக் கருவிகளைப் பற்றி ஆய்வு செய்து "யாழ்நூல்" என்ற நூலை 1936 -இல் வெளியிட்டார். இது இவருக்கு அழியாப்புகழைப் பெற்று தந்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அன்பு செலுத்தினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். இலங்கையிலும் இந்தியாவிலும் சாதியம் இறுக்கமாக இருந்த அக்காலக் கட்டத்தில் எல்லாரும் சமம் என்ற கருத்தாக்கத்த்ப் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் வேரூன்றினார். "எல்லோருக்கும் கல்வி, பார்பனிய எதிர்ப்பு" போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார். சைவ சமயத்தை இவர் தமிழரின் பண்பாடாகப் பார்த்ததினால் மதமாற்றத்தையும், மற்றமதங்களின் வல்லான்மையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்ச் சைவத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதன் காரணமாக இராமகிருட்டின மடத்தில் சேர்ந்து துறவு நிலை ஏற்றார்.

இவாறு தமிழ் அறிஞராகவும். தலைசிறந்த கலைஞரகவும், சைவத்துரவியாகவும் தமிழக வரலாற்றில் மிளிர்பவர் தான் விபுலானந்த அடிகளார். 1947 சூலை 19 -ஆம் நாள் அன்று விபுலானந்த அடிகள் தன் இன்னுயிரைத் துறந்தார்

ஜூலை 18 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.

1656 - போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்.

1872 - ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

1916 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

1944 - இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.

1965 - சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 - நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.

1982 - குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 - கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.

1995 - கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்ததில் வெடித்துச் சிதறியதன் காரணமாக மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.

1997 - மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

1998 - பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2007 - மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1909 - அந்திரே குரோமிக்கோ, சோவியத் அதிபர் (இ. 1989)

1918 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர்.

1935 - ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து ஆன்மிகத் தலைவர்.

1950 - சேர் றிச்சர்ட் பிரான்சன், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்

1982 - பிரியங்கா சோப்ரா, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1817 - ஜேன் ஒஸ்டென், ஆங்கில நாவலாசிரியை (பி. 1775)

1892 - தோமஸ் குக், ஆங்கிலேய பிரயாண முகவர் (பி. 1808)

1968 - கோர்னெல் ஹேமன்ஸ், நோபல் பரிசு பெற்றவர்.

சிறப்பு நாள்

உருகுவே - அரசியலமைப்பு நாள் (1830)
நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)

நெல்சன் மண்டேலா பிறப்பு



நெல்சன் மண்டேலா 18 .07 .1918 - ஆம் நாளன்று ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ட்ரான்ச்கெய் பகுதியில் உள்ள கியூனுவில் பிறந்தார். இவர் "ரிசாசா" என்னும் செல்வாக்கு மிக்க ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் "தெம்பு" அரச குடும்பத்தை சேர்ந்தவர்.

1938 -ஆம் ஆண்டில் "போர்ட் காரே" பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர்ந்த காலகட்டத்தில் மாணவர்கள் வேலை நிறுத்தம் ஒன்றில் தீவிர அரசியல் உணர்வோடு பங்கேற்றதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். அஞ்சல் வழியில் படித்து இளங்கலை பட்டதாரி ஆனா பின்னர் சொகனசுபர்க்கில் உள்ள விட்வாட்டார் சுரான்ட் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.

1948 -இல் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசு இவரை இளைஞர் அணியின் தேசியச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. பின்னர் 1950 -ஆம் ஆண்டு அதன் தலைவராக்கப்பட்டார். சட்டமறுப்பு, சட்டமீறல், வேலை நிறுத்தம், புறக்கணிப்பு, ஒத்துழையாமை போன்ற புதிய போராட்ட வடிவங்களை இவர் முன்னெடுத்தார்.

1952 -இல் இனவேறுபாடு சட்டத்தை எதிர்த்துப் போரிடப் பல்வேறு நாடுகளிலிருந்து தொண்டர்களைத் திரட்டினார். 26 .06 .1952 -இல் ௫௧ ஆதரவாளர்களுடன் தடை ஆணையை முதன் முதலில் மீறினார். 1953 - ஆம் ஆண்டு முடியும் வரை சட்டமறுப்பு இயக்கம் தொடர்ந்து நடைபெற்றது. நெல்சன்மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் தடைசெய்யப்பட்ட மாந்தர்" என வேலையர் ஆட்சி அறிவித்து அவரை பல இன்னல்களுக்கு ஆளாக்கியது.

பொது வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களைத் துணைவியாரால் பொறுத்துக் கொள்ள இயலாமையால் மன முறிவு ஏற்பட்டது. மண்டேலாவுக்கும் இவரது போராட்டங்களை ஆதரித்த வின்னி என்ற பெண்ணுக்கும் காதல் மலரவே, 1958 -இல் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.திரட்டினார். "தேசத்தின் போர்வாள்" என்னும் புதிய அதிரடிப்படையின் தலைவர் பொறுப்பை மண்டேலா ஏற்றுக்கொண்டார். அரசின் அடக்கு முறையால் தலைமறைவாக வாழ்ந்த இவர் 11 .01 .1962 அன்று முதல், எதியோப்பியா மற்றும் விடுதலை பெற்ற அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்றார். அல்சீரியாவில் படைப்பயிற்சி பெற்றார். ௧௭ மாதங்கள் தலை மறைவு வாழ்க்கைக்கு பின் சிறைபிடிக்கப்பட்டு, 14 .06 .1964 அன்று வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இராபன் தீவுச் சிறையில் இருந்தபோது, மண்டேலா இளம் அரசியல் சிறையாளிகளுக்குக் கல்வி புகட்டினார். அரைகுறைப் படிப்போடு சிறை சென்றவர்கள் பட்டதாரிகளாக வெளிவந்ததால் அந்த சிறைக்கு "மண்டேலா பல்கலைக் கழகம்"
எனப் பெயர் ஏற்பட்டு விட்டது. இதனால் இவர் போல்சுமூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

12 .05 .1984 -இல் வின்னி மண்டேலாவை நேரடியாகச் சந்திப்பதற்கு 22 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது. மண்டேலாவை விடுதலை செய்யும்படி உலகத்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். 31 .01 .1985 -இல் மண்டேலாவை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக அரசு அறிவித்தது. ஆனால் மண்டேலா, கீழ்காணும் கோரிக்கைகளை முன் வைத்தார்.

1 , அரசு முதலில் தனது இனப்பாகுபாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டும்.

2 , 14 % மட்டும் உள்ள வெள்ளையர்கள் 87 % நிலத்தை உரிமைபடுத்தி கொள்வதற்கு வசதியான திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

3 , நாடு முழுவதும் எல்லா இனத்தவருக்கும் "ஒருவருக்கு ஓர் ஒப்போலை உரிமை" என்று இருக்க வேண்டும்.

4 , அரசியலில் கறுப்பர்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும்.

1985 -இல் அறுவை மருத்தவம் செய்யவேந்தியக் கட்டாயத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நலம் பெற்று சிறைக்கு திரும்பியவர், காச நோய் காரணமாக 12 .08 .1988 -இல் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எப்.டபிள்யூ.கிளார்க் நாட்டின் தலைவராக இருந்த பொது 27 ஆண்டு சிறைவால்க்கையிளிருந்து 10௦.02 .1990 அன்று விடுதலை பெற்ற இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் துனைதளைவராகப் பொறுபேற்றார்.

1994 ஏப்ரல் 24 ஆம் நாள் அன்று நடந்த முதலாவது நிரவேற்றியற்ற இன ஒதுக்கல் இல்லாத தேர்தல் முறையில் மண்டேலா ஆட்சிக்கு வந்தார். தென்னாப்பிரிக்கா என்னும் நிறவெறி நாட்டை சிறந்த மக்களாட்சி நாடாக மாற்றி வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைத்தார். ஐந்து ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்து அடுத்த நூற்றாண்டை புதிய தலை முறையிடம் விட்டுவிட முடிவு செய்து, 1999 சூன் 16 -ஆம் நாள் 80 வயது நிறைந்த மண்டேலா மக்களாட்சித் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்றார்.

உலகிலேயே பதவியைத் துறந்து அமைதியாக வாழவும், ஓய்வு கொள்ளவும், இளைய தலைமுறைக்கு வலிவிடவும் விரும்பிய முதல் மாந்தர். "ஓர் அநீதியை மற்றோர் அநீதியால் எதிர் கொள்ள முடியாது" என்று மக்களுக்கு உணர்த்தியச் செம்மல் நெல்சன் மண்டேலா என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Saturday, July 17, 2010

ஜூலை 17 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1203 - நான்காம் சிலுவைப் படைகள் கொன்ஸ்டண்டீனபோல் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினான்.

1755 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்குலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 - ரஷ்யாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கத்தரீன் அரசியானாள்.

1771 - இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணித்த கனடாவின் சிப்பேவியன் பழங்குடிகளின் தலைவன் இனூயிட் மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 - பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1815 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.

1816 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1841 - முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.

1856 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1911 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.

1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாசும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.

1918 - டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய "கர்பாத்தியா" என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

1936 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.

1955 - கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.

1967 - நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 - ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.

1973 - ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 - அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 - கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.

1979 - நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1981 - மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 - நியூ யோர்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1998 - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2006 - இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1941 - பாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர்

1954 - ஏங்கலா மெர்கல், ஜெர்மனி நாட்டு அரசியல்வாதி

1971 - சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)

1977 - மாதங்கி அருள்பிரகாசம், ராப் இசைப் பாடகி

இறப்புகள்

1918 - ரசியாவின் மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் (பி. 1868) குடும்பம்
அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (பி. 1872)
ஒல்கா, இளவரசி (பி. 1895)
தத்தியானா, இளவரசி (பி. 1897)
மரீயா, இளவரசி (பி. 1899)
அனஸ்தாசியா, இளவரசன் (பி. 1901)
அலெக்சி, இளவரசன் (பி. 1904)

1972 - எமிலியானுஸ் பிள்ளை, யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் ஆயர், (பி. 1901)

சிறப்பு நாள்

தென் கொரியா - அரசியலமைப்பு நாள்

வாஞ்சிநாதன் இறப்பு
"ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தை பிடுங்கி கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குறு கோவிந்தன், அர்ஜூன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொள்ளும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதை தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."

இப்படிக்கு
ஆர்.வாஞ்சி அய்யர், செங்கோட்டை

நெல்லை மாவட்ட பொறுப்பு ஆட்சியர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆசுவை, அவர் பயணம் செய்த தொடர்வண்டிப் பெட்டியில் ஏறி கைத்துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி, தன்னைத்தானே சுட்டு சாவை தழுவிய வாஞ்சியின் சட்டை பையில் இருந்த மடல் தான் இது.

வாஞ்சி அன்றைய திருவிதாங்கூர் அரசை சார்ந்த செங்கோட்டையில் கோயில் ஒன்றில் மேற்காநிப்பு வேலை செய்து வந்த ரகுபதி என்பவரின் மகன் ஆவார். நான்கு பெண்களும், ஓர் ஆணும் இவரது உடன் பிறந்தோர் ஆவர். தனது ௨௩ ஆவது வயதில் போன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

காளி படத்திற்கு முன்னாள் குங்குமநீரை கையிலெடுத்து வெள்ளைக்காரர்களின் இரத்தத்தைக் குடிப்பதாகச் சொல்லிப் பருகும் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு "பாரத மாத சங்கம்" ஆகும். எதிர் பாரத இடரில் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிக்கிகொண்டால் எதிரிக்கு தங்கள் முழுமையான திட்டங்கள் தெரியாமலிருக்க தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற கட்டுபாட்டை ஏற்று, வாஞ்சியும் அதன் உறுப்பினர் ஆனார். இவருடைய இந்த வாழ்க்கை முறையின் வெளிப்பாடாக இவரது சாவு அமைகிறது.

"தனி ஆள் படுகொலை இயக்கமானது அதிகாரவர்க்கத்தை நிலைகுலையச் செய்யவும், மக்கள் எழுச்சி பெறவும் உதவும் சிறந்த வழிமுறையாகும். தனி ஆள் படுகொலையின் மூலமாக புரட்சியின் தொடக்க நிலை அமையும்" என்ற சாவர்க்கரின் அறிவுரையை ஏற்று வாஞ்சி ஆசு என்பவரை கொன்றார்.

விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் மத உணர்வு கலந்த ஆங்கிலேயர் எதிர்ப்புச் சிந்தனைகள் வஞ்சியை செயல்படத் தூண்டின.

வ.உ.சிதம்பரனாரின் தன்நாட்டு நீராவி கப்பல் நிறுவனத்தை அழித்தொழிக்க முயற்சி செய்தவர் ஆசு. வெள்ளைக்காரர்கள் மட்டும் குளிப்பதற்காக வேறு எவரும் குற்றால அருவியில் குளிக்கக்கூடாது என்ற நிறத்திமிர் பிடித்த ஆணை வெளியிட்டவரும் அவரே. இத்தகைய கொடுன்ச் செயல்களால் கோபம் கொண்ட வாஞ்சி அவரை சுட்டுக் கொன்றார் என்று சொல்லபடுகிறது.

அதே வேளையில் வாஞ்சி எழுதிய இறுதி மடல், அவர் ஏற்றுக் கொண்ட கொள்கை, ஆசு ஒரு முறை தாழ்த்தப்பட்ட மகப்பேறு பெண்ணை தன் வண்டியில் ஏற்றி பார்ப்பன சேரி (அக்கிரகாரம்) வழியாகக் கொண்டு சென்றதனால் சனாதன தர்மம் நசுக்கப்பட்டது என்ற அவரது பார்ப்பனர் சிந்தனை ஆகியவற்றின் பின்னணியோடு பார்க்கையில் வாஞ்சி, நாட்டுபற்றை விட சனாதன வெறியையும், ஆங்கில வல்லாதிக்க எதிர்ப்பு என்பதைவிட மனுதருமப் பாதுகாப்பு என்பதையுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார் என்றே என்னத தோன்றுகிறது.

Friday, July 16, 2010

ஜூலை 16 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

622 - முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.

1661 - ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.

1769 - சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.

1930 - எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல்
செலாசி வெளியிட்டார்.

1942 - பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.

1945 - மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

1948 - இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

1950 - உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-
1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1955 - டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

1965 - பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

1969 - அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.

1979 - ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

1989 - புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 - பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1995 - காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

1999 - ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 93 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1896 - ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968])

1942 - முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்

1968 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.

1984 - கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை

இறப்புகள்

1989 - உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்

2009 - டி. கே. பட்டம்மாள்

உலகின் முதல் அணுகுண்டு ஆய்வு


1945 - ஆம் ஆண்டு அமெரிகாவின் பெர்ல் தயுரைமுகத்தில் சப்பான் குண்டு வீசியது. இது நடந்த இரண்டாவது நாளிலேயே அமெரிக்க இரண்டாம் உலகப்போரில் நேரடியாக களம் இறங்கியது. சில மாதங்களில் சப்பான் மீது அணுகுண்டுகளை வீசியது. அந்த அணுகுண்டு உற்பத்திக்கு ஒரு வரலாறு உண்டு.


1939 - ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூச்வேல்ட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அறிவியலாளர் ஜன்சுடின் ஒரு மடல் எழுதினார். அதில் யுரேனியத்தின் அணுக்கள் மீது சில மாற்றங்களைச் செய்வதின் மூலம் அளப்பரிய ஆற்றலை உருவாக்கி அதிக விளைவை ஏற்படுத்தக் கூடிய குண்டுகளை உற்பத்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்,

அதன்படி ஒரு புதிய படைகருவியை உற்பத்தி செய்ய அமெரிக்க அரசு பெருமளவிலான நிதியை ஒதுக்கியது. நியூ மெக்சிகோ அருகில் உள்ள லாசு அறிமாசு என்னும் இடம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆய்வுக்கான இடத்திற்கு "சாவுப்பாதை" என்று பெயரிடப்பட்டது. அங்கிருந்த பள்ளிக்கூடம் ஒன்று அகற்றப்பட்டது. அஞ்சல் பெட்டி என் 1663 என்ற அலுவலகம் இருக்கிறது என்பதை தவிர்த்து அங்குள்ள மக்களுக்கு வேறொன்றும் தெரியாதிருந்தது.

தொடக்கத்தில் 30 பேர்களை கொண்டிருந்த அறிவியலாளர் குழு 1945 சூலை திங்களில் 2500 அறிவியலாளர்களை கொண்ட ஆய்வு கூடமாக மாறியது. பணிகள் நிறைவுறும் வேளையில் இத்திட்டத்தின் தலைவராக இருந்தவர் 40 வயதான சே,ராபர்ட் ஓபன் கூமர் என்பவர் ஆவார். இதற்கிடையில் குடியரசு தலைவர் ரூஸ்வெல்ட் இறந்து விட்டார். இருப்பினும் புதிதாக பொறுப்பேற்ற குடியரசு தலைவர் காரி ட்ரூமன் எப்படியும் சப்பான் மீது அணுகுண்டுகளை வீச வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தவறு நடந்து விட்டால், தன் நாட்டு மக்களையே அழித்துவிடும் சோதனை இது என்று அறிந்திருந்த அறிவியலாளர்கள் கலக்கத்தோடும் எதிர்நோக்கொடும் 1945 சூலை 16 ஆம் நாள் மாலை 5.30௦ மணிக்கு முதல் அணுகுண்டை வெடித்து ஆய்வை முடித்தனர்.

உருவாக்கபட்ட அணுகுண்டை எங்கு வீசி விளைவுகளைத் தெரிந்துகொள்வது என்ற கேள்வி எழுந்தது. இட்லரின் செருமனியில் அணுகுண்டுத் தாக்குதலை மேற்கொண்டால் பிரான்சு, பெல்சியம், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும் அழிவை சந்திக்க நேரிடும். அதே தாக்குதலை சப்பான் மீது நடத்தினால் சீனாவும் கொரியாவும் தான் இன்னல்களுக்குள்ளாகும். எனவே சப்பானில் அணுகுண்டை வீச ட்ரூமன் முடிவு செய்தார். ஆனால் அதற்கு முன்பே சப்பான் அடிபணிந்து விட்டது. சப்பானியர் அனுப்பிய மடல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சப்பானை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே அமெரிகாவின் நோக்கம் அல்ல. அது மட்டுமே நோக்கமாக இருந்திருக்குமென்றால், அதற்கு அணுகுண்டுகளைப் போட்டிருக்க வேண்டியதில்லை. மாறாக முதல் அணுகுண்டை வீசி உலகத்தை ஆட்டிபடைக்க வேண்டும்.; தன குடையின் கீழ் அனைத்து நாடுகளையும் அடிபணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்திர்ககத்தான் ஆகஸ்டு .6 , 9
ஆகிய நாட்களில் முறையே கிரோசிமா. நாகாசாகி நகரங்கள் மீது அமெரிக்க அணுகுண்டுகளை வீசியது.


சப்பான் நாட்டில் நடந்து விட்ட மிகப்பெரிய அழிவை பார்த்தவுடன் அணுகுண்டு ஏற்பத்தயுற்பத்தி செய்த அறிவியலாளர் ராபர்ட் ஓபன் கூமர் பதவி விலகினார்.அணுகுண்டை வானூர்தியில் ஏற்றி சென்ற ஒருவருக்கு கிறுக்கு பிடித்தது. மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மாந்த இனம் தன்னுடைய அழிவை, மிகப்பெரிய அறிவியலாளர்கள், அறிவாளிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மூலம் தேடிகொண்டது. அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த அறிவு மோசடியை இன்று நாடுகளும் செய்வதற்கு பழகி கொண்டன.

உலகை அச்சுறுத்தும் அணுகுண்டுகளை, அணு உலைகளை இல்லமையாக்க உறுதி ஏற்போம் இன்று.

Wednesday, July 14, 2010

ஜூலை 15 - வரலாற்றில் இன்று










































நிகழ்வுகள்

1240 - அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1381 - இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.

1741 - அலெக்சி சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

1815 - நெப்போலியன் பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.

1840 - ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1857 - சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1860 - இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.

1870 - புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.

1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1888 - ஜப்பானின் பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

1916 - வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1927 - வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1954 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.

1955 - அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1974 - சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.

1983 - பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

2002 -- வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003 - மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்

1606 - ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)

1876 - மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)

1903 - கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)

இறப்புகள்

1904 - அன்ரன் செக்கோவ், ரசிய எழுத்தாளர் (பி. 1860)

1991 - நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)

2002 - எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)

2003 - என். கே. பத்மநாதன், ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் (பி. 1931)



காட் ஒப்பந்தம் - இந்தியா அடகு வைப்பு.

1994 , ஏப்ரல் 15 -ஆம் நாள் இந்திய வளங்களும், மக்களும் அடகு வைக்கப்பட்ட நாள். அன்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக வர்த்தகத்தில் அதாவது முதல் உலக நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டது. பல குடியேற்ற நாடுகள் தன்னுரிமை பெற்றதால் ஆதிக்க நாடுகள் மூலப்பொருள் பெறுவதிலும், சந்தையைப் பெருக்குவதிலும் பெரும் தடைகள் உருவாயின. இந்நிலையை சமாளிக்க பணக்கார நாடுகள் ஓர் உலகளாவிய திட்டத்தை உருவாக்க 1948 -ல் கூடி வரி மற்றும் வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தை ( General Agreement on Trade and Tarriff - GATT ) ஏற்படுத்தினர். இதற்குச் செயல்திட்ட வடிவம் கொடுக்கப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 1986 - ல் உருகுவேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆர்தர் டங்கள் என்பவர் முன்மொழிந்த திட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது அது 'டங்கள் திட்டம்' என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவிற்கு எதிர்விளைவை உண்டாக்கும் பல அம்சங்கள் உள்ளன என்று முதலில் கூறினாலும், பல அழுத்தங்களின் விளைவாக, நாடாளுமன்றத்தில் கூட விவாதம் நடத்தாமல் இந்தியா இத்திட்டத்தில் கையெழுத்திட்டது. இல்லை. இந்தியாவை அடகு வைத்தது.



இந்த திட்டம் பின்னாளில் உலக வர்த்தக நிறுவனம் .( World Trade Organisation - WTO ). என அமைப்பாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
உலக வர்த்தக நிறுவனம் இயந்திரமயம்?, தனியார்மயம்?, உலகமயம் போன்ற அடித்தளங்களின் மேல் கட்டப்பட்டுள்ள ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒற்றை ஆதிக்க அமைப்பாகும்.

இயந்திரமயம் அறிமுகப்படுத்தப்பட்டு உற்பத்தி எல்லாம் இயந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன. மக்களுடைய வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது.

தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கபடுகின்றன. இதன் விளைவாக அரசுத்துறை வேலைவாய்ப்புகளும், அரசுத்துறைகள் மூலம் கிடைக்கும் வருவாயும் பணக்கார நிறுவனங்களுக்குச் சென்று சேர்கின்றன.

தாராளமயக் கொள்கையால் வணிகத்திகான எல்லாவிதமான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையும், உள்நாட்டு - நடுத்தர நிறுவனங்களின் வாய்ப்பு இழப்பும் தடையின்றி நடக்கின்றன.

உச்சகட்டமாக உலகமயம் என்ற கொள்கையால் உலக நாடுகள் அனைத்திலும் எவ்விதத் தடையுமின்றி பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக அமெரிக்கா போன்ற முதல் உலக நாடுகள் பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு வல்லான்மையைத் திணிக்கின்றன. உலகம் முழுவதும் காலனியாக மாற்றபடுகிறது.

உலக நாடுகள் வணிகத்திற்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது.

அரசின் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக அளவில் மையப்படுத்தப்பட வேண்டும்.
போன்றவை காட் ஒப்பந்ததத்தின் விதிகளில் சில

டங்கள் திட்டம் அல்லது காட் ஒப்பந்தத்தின் வழியிலமைந்த உலக வர்த்தக நிறுவனம் இன்று வணிகம், வேளாண்மை, அரசின் நலத்திட்டங்கள் என எல்லாத் துறைகளிலும் மூக்கை நுழைக்கின்றன. காப்புரிமை என்ற பெயரில் மண்ணின் வளங்களையும், மக்களின் அறிவுச் சொத்தையும் கொள்ளை கொள்கின்றன. உலக வர்த்தக நிறுவனம் நுழையாத இடமே இல்லை. கொள்ளையடிக்காத துறைகளே இல்லை என்னுமளவிற்கு எங்கும் பரந்து தன் வஞ்சக வலையை விரித்துள்ளது.

மண்ணையும், மக்களையும் நேசிக்கிற ஒவ்வொருவரும் இத்தகைய உலகளாவிய ஆதிக்கப் போக்குகளை எதிர்த்து எப்போதும் போராட வேண்டும், போரிட வேண்டும்.

Tuesday, July 13, 2010

ஜூலை 14 - வரலாற்றில் இன்று

சிறப்பு நாள்
பிரான்ஸ் - பாஸ்டில்
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" - லெனின்.

ஒவ்வொரு எழுச்சிக்கும், மக்களின் போராட்டத்திற்கும், புரட்சிக்கும் தூண்டுதலாக, வடிகாலாக அமைவது சிலரின் உணர்வு பூர்வமான பேச்சுகளும், எழுத்துக்களும், வழிகட்டுதலுமே. பாஸ்டின் சிறைச்சாலைத் தகர்க்கப்பட்டதற்கும் ரோட்டோ, ரூசோ, மண்டேச்க்யு போன்ற அறிஞர்களின் எழுத்துக்கள் காரணங்களாக அமைந்தன.

1989 சூலை 14 -ஆம் நாள் காலை ௮௦,௦௦௦ பேர் கொண்ட மக்கள் கூட்டம் விடுதி தி இன் வேலிடேஸ் (Hotel De Invalides ) என்ற இடத்தில் அமைந்த படைகள் கொட்டிலை சூறையாடியது. 32 ஆயிரம் துப்பாக்கிகளையும், 12 தகரிகளையும், கொஞ்சம் வெடிமருந்தையும் கைப்பற்றினர். அதே போராட்ட உணர்வோடு அடுத்த சில நிமிடங்களில் பாஸ்டின் சிறைச்சாலையையும் தகர்த்து எறிந்தார்கள்.

100 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட பாஸ்டின் சிறைச்சாலைச் சுவர் அடிமைத்தனத்தின் சின்னமாக, வலுவாக அமைந்திருந்தது. ஆனால் ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியும், போராட்ட உணர்வும், செயல்பாடுகளும் அடக்குமுறைச் சின்னங்களையும் தகர்த்தெறியும்

நிகழ்வுகள்
1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
1865 - எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.
1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
1933 - ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
1948 - இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.
1958 - ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.
1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
1966 - குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1989 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995 - MP3 பெயரிடப்பட்டது.
1995 - இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.
2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
[தொகு] பிறப்புகள்
1929 - வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர்.
1943 - ரோகண விஜயவீர, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், புரட்சியாளர் (இ. 1989)
[தொகு] இறப்புகள்
1827 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)
1998 - டிக் மக்டொனால்ட், மக்டொனால்ட் நிறுவன தாபகர் (பி. 1909)
2008 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)