Friday, July 16, 2010

ஜூலை 16 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

622 - முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.

1661 - ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.

1769 - சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.

1930 - எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல்
செலாசி வெளியிட்டார்.

1942 - பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.

1945 - மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

1948 - இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

1950 - உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-
1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1955 - டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

1965 - பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

1969 - அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.

1979 - ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

1989 - புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 - பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1995 - காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

1999 - ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 93 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1896 - ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968])

1942 - முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்

1968 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.

1984 - கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை

இறப்புகள்

1989 - உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்

2009 - டி. கே. பட்டம்மாள்

உலகின் முதல் அணுகுண்டு ஆய்வு


1945 - ஆம் ஆண்டு அமெரிகாவின் பெர்ல் தயுரைமுகத்தில் சப்பான் குண்டு வீசியது. இது நடந்த இரண்டாவது நாளிலேயே அமெரிக்க இரண்டாம் உலகப்போரில் நேரடியாக களம் இறங்கியது. சில மாதங்களில் சப்பான் மீது அணுகுண்டுகளை வீசியது. அந்த அணுகுண்டு உற்பத்திக்கு ஒரு வரலாறு உண்டு.


1939 - ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூச்வேல்ட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அறிவியலாளர் ஜன்சுடின் ஒரு மடல் எழுதினார். அதில் யுரேனியத்தின் அணுக்கள் மீது சில மாற்றங்களைச் செய்வதின் மூலம் அளப்பரிய ஆற்றலை உருவாக்கி அதிக விளைவை ஏற்படுத்தக் கூடிய குண்டுகளை உற்பத்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்,

அதன்படி ஒரு புதிய படைகருவியை உற்பத்தி செய்ய அமெரிக்க அரசு பெருமளவிலான நிதியை ஒதுக்கியது. நியூ மெக்சிகோ அருகில் உள்ள லாசு அறிமாசு என்னும் இடம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆய்வுக்கான இடத்திற்கு "சாவுப்பாதை" என்று பெயரிடப்பட்டது. அங்கிருந்த பள்ளிக்கூடம் ஒன்று அகற்றப்பட்டது. அஞ்சல் பெட்டி என் 1663 என்ற அலுவலகம் இருக்கிறது என்பதை தவிர்த்து அங்குள்ள மக்களுக்கு வேறொன்றும் தெரியாதிருந்தது.

தொடக்கத்தில் 30 பேர்களை கொண்டிருந்த அறிவியலாளர் குழு 1945 சூலை திங்களில் 2500 அறிவியலாளர்களை கொண்ட ஆய்வு கூடமாக மாறியது. பணிகள் நிறைவுறும் வேளையில் இத்திட்டத்தின் தலைவராக இருந்தவர் 40 வயதான சே,ராபர்ட் ஓபன் கூமர் என்பவர் ஆவார். இதற்கிடையில் குடியரசு தலைவர் ரூஸ்வெல்ட் இறந்து விட்டார். இருப்பினும் புதிதாக பொறுப்பேற்ற குடியரசு தலைவர் காரி ட்ரூமன் எப்படியும் சப்பான் மீது அணுகுண்டுகளை வீச வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தவறு நடந்து விட்டால், தன் நாட்டு மக்களையே அழித்துவிடும் சோதனை இது என்று அறிந்திருந்த அறிவியலாளர்கள் கலக்கத்தோடும் எதிர்நோக்கொடும் 1945 சூலை 16 ஆம் நாள் மாலை 5.30௦ மணிக்கு முதல் அணுகுண்டை வெடித்து ஆய்வை முடித்தனர்.

உருவாக்கபட்ட அணுகுண்டை எங்கு வீசி விளைவுகளைத் தெரிந்துகொள்வது என்ற கேள்வி எழுந்தது. இட்லரின் செருமனியில் அணுகுண்டுத் தாக்குதலை மேற்கொண்டால் பிரான்சு, பெல்சியம், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும் அழிவை சந்திக்க நேரிடும். அதே தாக்குதலை சப்பான் மீது நடத்தினால் சீனாவும் கொரியாவும் தான் இன்னல்களுக்குள்ளாகும். எனவே சப்பானில் அணுகுண்டை வீச ட்ரூமன் முடிவு செய்தார். ஆனால் அதற்கு முன்பே சப்பான் அடிபணிந்து விட்டது. சப்பானியர் அனுப்பிய மடல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சப்பானை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே அமெரிகாவின் நோக்கம் அல்ல. அது மட்டுமே நோக்கமாக இருந்திருக்குமென்றால், அதற்கு அணுகுண்டுகளைப் போட்டிருக்க வேண்டியதில்லை. மாறாக முதல் அணுகுண்டை வீசி உலகத்தை ஆட்டிபடைக்க வேண்டும்.; தன குடையின் கீழ் அனைத்து நாடுகளையும் அடிபணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்திர்ககத்தான் ஆகஸ்டு .6 , 9
ஆகிய நாட்களில் முறையே கிரோசிமா. நாகாசாகி நகரங்கள் மீது அமெரிக்க அணுகுண்டுகளை வீசியது.


சப்பான் நாட்டில் நடந்து விட்ட மிகப்பெரிய அழிவை பார்த்தவுடன் அணுகுண்டு ஏற்பத்தயுற்பத்தி செய்த அறிவியலாளர் ராபர்ட் ஓபன் கூமர் பதவி விலகினார்.அணுகுண்டை வானூர்தியில் ஏற்றி சென்ற ஒருவருக்கு கிறுக்கு பிடித்தது. மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மாந்த இனம் தன்னுடைய அழிவை, மிகப்பெரிய அறிவியலாளர்கள், அறிவாளிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மூலம் தேடிகொண்டது. அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த அறிவு மோசடியை இன்று நாடுகளும் செய்வதற்கு பழகி கொண்டன.

உலகை அச்சுறுத்தும் அணுகுண்டுகளை, அணு உலைகளை இல்லமையாக்க உறுதி ஏற்போம் இன்று.

No comments: