Friday, July 23, 2010

ஜூலை 23 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.

1793 - புரூசியர்கள் ஜெர்மனியின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.

1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1840 - கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1874 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து ஜூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.

1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.

1952 - எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார்.

1961 - நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.

1962 - லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.

1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

1970 - ஓமானின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.

1983 - திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.

1988 - பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.

1992 - ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.

1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

1999 - சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

பிறப்புகள்

1856 - லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)

1892 - முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (இ. 1975)

1975 - சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர்

1984 - பிரான்டன் ராய், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1885 - யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்க அரசுத் தலைவர் (பி. 1822)

1916 - சேர் வில்லியம் ராம்சி, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி. 1852)

1925 - சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)

1989 - தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்

1957 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)

சிறப்பு நாள்

எகிப்து - புரட்சி நாள் (1952)

லிபியா - புரட்சி நாள்

பப்புவா நியூ கினி - நினைவு நாள்

மாவீரன் செல்லக்கிளி வீரசாவு



தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்தே அதன் உறுப்பினரைத் திகழ்ந்தவர் செல்லக்கிளி. பின்வரும் நிகழ்ச்சி அவரது வீரத்தைப் பறைசாற்றும்.

தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்த கனகரத்தினம் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் 1978 -ஆம் ஆண்டு கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டார். அக்கொலையில் உமா மகேசுவரன் தொடர்புடையவரென்று, அவரையும் பிற கொலையாளிகளையும் கண்டுபிடிக்க திறமைமிக்கவர் எனக் கருதப்பட்ட பாசுதியாம் என்னும் புலைவுதுரை சிறப்பு அலுவலர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

7 .04 .1978 அன்று உமா மகேசுவரன் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் என்ற இடத்தில் தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார். காட்டு பகுதியில் ஒரு மரத்தின் படர்ந்த கிளைகளில் நின்றுகொண்டு பயிற்சியை வலி நடத்திக் கொண்டிருந்தார். பயிற்சி பெற்றுகொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் செல்லக்கிளி ஆவார். அப்போது பாசுதியாம் என்பவரும் சில காவலர்களும் கொலையாளியை தேடிக்கொண்டே அந்த இடம் வந்தடைந்தனர். மரத்தின் மேலே நின்றுகொண்டிருந்த உமா மகேசுவரனை கவனிக்கவில்லை.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவர் தங்களை வேளாண்மை பணியாளர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, விருந்தினருக்கு தண்ணீர் கொடுத்து விருந்தோம்பல் செய்யும்படி தன உடன் தோழரிடம் சொன்னார். அவ்வாறே இளைஞர்களில் ஒருவர் தண்ணீர் கொடுக்க, பாசுதியாமும் பிறரும் துப்பாக்கிகளைக் கீழே வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க முற்பட்ட இமைப் பொழுதில் செல்லக்கிளி செயல்பட்டு, மின்னல் வேகத்தில் பாசுதியாம் என்பவரின் எந்திர துப்பாக்கியை எடுத்து அவர்களை தாக்கினார். நொடிபொழுதில் வந்தவர்கள் பிணமாய் சாய்ந்தனர். செள்ளகிளியின் நுண்ணறிவினாலும் துனிச்சலாலும் நடந்த இந்தத்தாக்குதல் சிங்கள அரசுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்து 1983 -ஆம் ஆண்டுத் தேர்தலின்போது சீலனுடன் சேர்ந்து மற்றொரு தாக்குதலில் பங்கெடுத்தார். அரசு அறிவித்திருந்த மாவட்ட மன்றத்துக்கான தேர்தலைப் புறக்கணிக்கும்படி புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி 90 % தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். மேலும் வாக்கு பதிவுறும் நேரத்தில் செல்லக்கிளி மற்றும் சீலன் குழுவினர் ஒரு வாக்கு பதிவு அறை மீது தாக்குதல் நடத்தி வாக்குபதிவை சீர்குலைத்தனர். செல்லக்கிளி காவலர்களிடம் போர்க்கருவிகளை கைப்பற்றினார்.

15 .07 .1983 அன்று அரசுப்படையால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சீலன் என்ற சார்லசு லூகாசு ஆண்டனி இறந்து போனான். அவரது இறப்புக்கு பழி வாங்கும் நோக்கில் தாக்குதல் ஒன்றைச் செல்லக்கிளி திட்டமிட்டார். தாக்குதலுக்கான இடத்தையும் திட்டத்தையும் ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டதோடு, பிரபாகரனே தலைமையேற்று இத்தாக்குதலை நடத்த முடிவெடுத்தார். இத்தாக்குதலில் கிட்டு, செல்லக்கிளி, விக்டர், ஐயர், புலேந்திரன், சந்தோசம் போன்ற முன்னணி வீரர்களும் இருந்தனர்.

சீலனுக்கு பிறகு அரசுப்படை செல்லக்கிளி மீது குறிவைத்துக் காத்திருந்தது. 23 .07 .83 அன்று 15 படை வீரர்கள் குருநகர் முகாமிலிருந்து இரண்டு ஊர்திகளில் புறப்பட்டனர். இரவு 11 .28 -க்கு உரும்பிராய் எனும் ஊரை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் செய்தி அனுப்பினர். போர் ஊர்தி திருநெல்வேலி என்ற இடத்தை அடைந்த பொது புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. ஒரு ஊர்தி காற்றில் பறந்தது. காத்திருந்த புலிகள் அரசுப் படையினர் மீது தாக்குதல் நடத்தி 13 வீரர்களை கொன்று அவர்களின் போர்க் கருவிகளை கைப்பற்றினர்.



தாக்குதல் முடிந்ததும் பிரபாகரனைச் சூழ்ந்து நின்று கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது செல்லக்கிளி காணவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விக்டர் தாக்குதலுக்காக பதுங்கியிருந்த இடம் நோக்கி ஓடினார். அங்கே நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் மாவீரனாய் மடிந்து போயிருந்தார் செல்லக்கிளி.

அரசு படை வந்து விடலாம் என்ற சூழலில் கைப்பற்றிய போர்க்கருவிகளையும் செல்லக்கிளி உடலையும் எடுத்துகொண்டு அவ்விடத்தை விட்டு சென்றனர். செல்லக்கிளியை அருகிலேயே அடக்கம் செய்தனர். அவர்களின் கமுக்கமான மறைவிடைத்தை அடைந்ததும் பிரபாகரன் அழத்தொடங்கினார்.பிரபாகரன் அழுவதை முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் அன்றுதான் பார்த்தேன் என்று பின்னாளில் கிட்டு குறிப்பிடுகிறார். செல்லக்கிளியின் இறப்பு புலிகள் இயக்கத்திற்கு பேரிழப்பு.

தாமிரபரணி படுகொலை



தாமிரபரணி படுகொலை ஒலி ஒளி காட்சிகள்
http://meenakam.com/tamilvideo/?p=285

"வாழுரிமை" ஒவ்வொரு மனிதப் பிறவியின் இயல்பான உரிமை. அதை மறப்பதும், மறுப்பதும் மனித உரிமை மீறல் ஆகும். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய இம்மூன்றையும் இச்சமூகம் அளிக்க கடமைப்பட்டுள்ளது. இது மறுக்கப்படும்போது மனித உரிமை மீறலாக மாறுகிறது. இதற்கு எதிராக குரலெழுப்ப ஒவ்வொருவனுக்கும் உரிமை உண்டு. இந்த குரலுக்கு பதில் கிடைத்துள்ளதா எனப் பார்த்தால் இல்லையென்றே கூறலாம். எப்போதெல்லாம் எங்கெல்லாம் மனித உரிமைக்காக குரல் எழுப்பப்படுகிறதோ அங்கெல்லாம் அடக்கு முறைகள்தான் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது வரலாறு கூறும் உண்மை.

இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் மாஞ்சோலை தேயிலைதொட்ட தொழிலாளர்கள். இவர்கள் கொத்தடிமைகளாகவும், அதிக நேர வேலைக்காரர்களாகவும், குறைந்த கூலிகளாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்பட்டு வந்தார்கள்.
இவர்களை கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்டெடுத்து, மாஞ்சோலை தேயிளிதொட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தி, உரிய நன்மையை அங்குள்ள தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும். என்ற கோரிக்கையை தொல்தமிழர் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும், சில அரசியல் கட்சிகளும் முன்வைத்தன. அதை அரசு புறக்கணித்தது. தேயிலை தொட்ட முதலாளிகளால் ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். இதை உணர்ந்து மக்கள் தொடர்ந்து போராடினர்.

இறுதியாக 09 .06 .1999 அன்று திருநேல்வேல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தர்ணா ஒன்று நடத்தினர். அப்போது அதில் கலந்துகொண்ட 169 பெண்கள் உட்பட 652 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி சூலை 23 -ஆம் நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கென சிலரை அழைத்துச் சென்றனர். திடீரென காவல்துறை மக்களை தடயடி நடத்திக் கலைத்தது. கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கி சூடு, கல் வீச்சுகள் போன்ற ஆயுதங்களின் மூலமாக தாக்கப்பட்டனர். தங்களை காப்பாற்றிக்கொள்ள தாமிரபரணியில் இறங்கி ஓட ஆரம்பித்தனர். ஆற்றிலும் அவர்களை துரத்தி அடித்தும் ஆற்றிலிருந்து பலரை வெளியேற விடாமல் மூல்கடித்தும் மக்கள் மீது வன்முறையை ஏவினர். பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தனர்.

இதற்கான நீதி இன்று வரை இல்லை. இவை எல்லாம் நாம் எப்படிப்பட்ட அரசியல் அமைப்பில் வாழ்கிறோம்? மனித உரிமை மீறலில் இச்சமூகம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரிகிறது.

No comments: