Wednesday, July 14, 2010

ஜூலை 15 - வரலாற்றில் இன்று










































நிகழ்வுகள்

1240 - அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1381 - இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.

1741 - அலெக்சி சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

1815 - நெப்போலியன் பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.

1840 - ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1857 - சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1860 - இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.

1870 - புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.

1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1888 - ஜப்பானின் பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

1916 - வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1927 - வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1954 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.

1955 - அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1974 - சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.

1983 - பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

2002 -- வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003 - மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்

1606 - ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)

1876 - மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)

1903 - கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)

இறப்புகள்

1904 - அன்ரன் செக்கோவ், ரசிய எழுத்தாளர் (பி. 1860)

1991 - நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)

2002 - எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)

2003 - என். கே. பத்மநாதன், ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் (பி. 1931)



காட் ஒப்பந்தம் - இந்தியா அடகு வைப்பு.

1994 , ஏப்ரல் 15 -ஆம் நாள் இந்திய வளங்களும், மக்களும் அடகு வைக்கப்பட்ட நாள். அன்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக வர்த்தகத்தில் அதாவது முதல் உலக நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டது. பல குடியேற்ற நாடுகள் தன்னுரிமை பெற்றதால் ஆதிக்க நாடுகள் மூலப்பொருள் பெறுவதிலும், சந்தையைப் பெருக்குவதிலும் பெரும் தடைகள் உருவாயின. இந்நிலையை சமாளிக்க பணக்கார நாடுகள் ஓர் உலகளாவிய திட்டத்தை உருவாக்க 1948 -ல் கூடி வரி மற்றும் வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தை ( General Agreement on Trade and Tarriff - GATT ) ஏற்படுத்தினர். இதற்குச் செயல்திட்ட வடிவம் கொடுக்கப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 1986 - ல் உருகுவேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆர்தர் டங்கள் என்பவர் முன்மொழிந்த திட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது அது 'டங்கள் திட்டம்' என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவிற்கு எதிர்விளைவை உண்டாக்கும் பல அம்சங்கள் உள்ளன என்று முதலில் கூறினாலும், பல அழுத்தங்களின் விளைவாக, நாடாளுமன்றத்தில் கூட விவாதம் நடத்தாமல் இந்தியா இத்திட்டத்தில் கையெழுத்திட்டது. இல்லை. இந்தியாவை அடகு வைத்தது.



இந்த திட்டம் பின்னாளில் உலக வர்த்தக நிறுவனம் .( World Trade Organisation - WTO ). என அமைப்பாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
உலக வர்த்தக நிறுவனம் இயந்திரமயம்?, தனியார்மயம்?, உலகமயம் போன்ற அடித்தளங்களின் மேல் கட்டப்பட்டுள்ள ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒற்றை ஆதிக்க அமைப்பாகும்.

இயந்திரமயம் அறிமுகப்படுத்தப்பட்டு உற்பத்தி எல்லாம் இயந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன. மக்களுடைய வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது.

தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கபடுகின்றன. இதன் விளைவாக அரசுத்துறை வேலைவாய்ப்புகளும், அரசுத்துறைகள் மூலம் கிடைக்கும் வருவாயும் பணக்கார நிறுவனங்களுக்குச் சென்று சேர்கின்றன.

தாராளமயக் கொள்கையால் வணிகத்திகான எல்லாவிதமான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையும், உள்நாட்டு - நடுத்தர நிறுவனங்களின் வாய்ப்பு இழப்பும் தடையின்றி நடக்கின்றன.

உச்சகட்டமாக உலகமயம் என்ற கொள்கையால் உலக நாடுகள் அனைத்திலும் எவ்விதத் தடையுமின்றி பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக அமெரிக்கா போன்ற முதல் உலக நாடுகள் பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு வல்லான்மையைத் திணிக்கின்றன. உலகம் முழுவதும் காலனியாக மாற்றபடுகிறது.

உலக நாடுகள் வணிகத்திற்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது.

அரசின் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக அளவில் மையப்படுத்தப்பட வேண்டும்.
போன்றவை காட் ஒப்பந்ததத்தின் விதிகளில் சில

டங்கள் திட்டம் அல்லது காட் ஒப்பந்தத்தின் வழியிலமைந்த உலக வர்த்தக நிறுவனம் இன்று வணிகம், வேளாண்மை, அரசின் நலத்திட்டங்கள் என எல்லாத் துறைகளிலும் மூக்கை நுழைக்கின்றன. காப்புரிமை என்ற பெயரில் மண்ணின் வளங்களையும், மக்களின் அறிவுச் சொத்தையும் கொள்ளை கொள்கின்றன. உலக வர்த்தக நிறுவனம் நுழையாத இடமே இல்லை. கொள்ளையடிக்காத துறைகளே இல்லை என்னுமளவிற்கு எங்கும் பரந்து தன் வஞ்சக வலையை விரித்துள்ளது.

மண்ணையும், மக்களையும் நேசிக்கிற ஒவ்வொருவரும் இத்தகைய உலகளாவிய ஆதிக்கப் போக்குகளை எதிர்த்து எப்போதும் போராட வேண்டும், போரிட வேண்டும்.

No comments: