நிகழ்வுகள்
1545 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.
1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
1985 - இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.
1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
பிறப்புகள்
1827 - மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)
1893 - விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)
1938 - ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்
1979 - தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்
1979 - மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை
இறப்புகள்
1947 - சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)
1947 - ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915)
1987 - ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)
சிறப்பு நாள்
மியான்மார் - பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)
விபுலானந்த அடிகள் இறப்பு
"நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி மக்கள் ஊர்களுக்கு வெளியில் கவனிப்பாரற்ற நிலையில், கல்வி, நலவாழ்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருக்கும் வரையில் இந்திய சமூகம் முன்னேற முடியாது" என்று முழங்கியவர் விபுலானந்த அடிகள் ஆவர்.
இவர், இலங்கையில் மட்டகளப்பு மாவட்டம் கரைத்தீவு என்ற சிற்றூரில் 26 .03 .1852 -இல் பிறந்தார். இவரது தாயர் கண்ணம்மையார். தந்தை சாமித்தம்பியார் என்பவர்கள் ஆவர். இவர் இளமையில் இலங்கையிலும் அதன் பின்னர் வட இந்தியாவிலும் தமிழகத்திலும் வாழ்ந்தார்.
ஈழத்தமிழரான இவர் தாய்தமிழைக் கசடறக் கற்றார். தாய்மொழி வளர்ச்சி கருதி தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல அறிய உரைவீச்சுகளை வழங்கி தமிழை வளர்த்துள்ளார். தனது ஆய்வு அறிவை அதிகமாக கலைத்துறையில் அதிலும் குறிப்பாக இசைத்துறையில் பயன்படுத்தியுள்ளார்.
தமிழ் இசையையும், மேற்கத்திய இசையும் இணைத்தும், பிரித்தும் அவற்றின் தன்மைகளை விளக்கியும் 12 -க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1930 முதல் தமிழ் இசையில் கவனம் செலுத்திச் சங்க கால இசைக் கருவிகளைப் பற்றி ஆய்வு செய்து "யாழ்நூல்" என்ற நூலை 1936 -இல் வெளியிட்டார். இது இவருக்கு அழியாப்புகழைப் பெற்று தந்தது.
ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அன்பு செலுத்தினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். இலங்கையிலும் இந்தியாவிலும் சாதியம் இறுக்கமாக இருந்த அக்காலக் கட்டத்தில் எல்லாரும் சமம் என்ற கருத்தாக்கத்த்ப் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் வேரூன்றினார். "எல்லோருக்கும் கல்வி, பார்பனிய எதிர்ப்பு" போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார். சைவ சமயத்தை இவர் தமிழரின் பண்பாடாகப் பார்த்ததினால் மதமாற்றத்தையும், மற்றமதங்களின் வல்லான்மையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்ச் சைவத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதன் காரணமாக இராமகிருட்டின மடத்தில் சேர்ந்து துறவு நிலை ஏற்றார்.
இவாறு தமிழ் அறிஞராகவும். தலைசிறந்த கலைஞரகவும், சைவத்துரவியாகவும் தமிழக வரலாற்றில் மிளிர்பவர் தான் விபுலானந்த அடிகளார். 1947 சூலை 19 -ஆம் நாள் அன்று விபுலானந்த அடிகள் தன் இன்னுயிரைத் துறந்தார்
No comments:
Post a Comment