Friday, July 23, 2010

ஜூலை 22 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1499 - புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

1587 - வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர்.

1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.

1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1933 - வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

1962 - நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

2009 - சூரிய கிரகணம், 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

பிறப்புகள்

1923 - முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)

1983 - நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1832 - இரண்டாம் நெப்போலியன், பிரான்சின் பேரரசன் (பி. 1811)

சிறப்பு நாள்

அண்ணளவு நாள்
மர்தலேன் மரியாள் திருவிழா நாள்

நிலவில் மாந்தர்




புவியிலிருந்து இரு நூற்று ஐம்பதாயிரம் கல் தொலைவில் உள்ள நிலவில் 22 .07 .1969 அன்று ஆம்சுட்ராங்கும் அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் காலடி எடுத்து வைத்து அமெரிக்க மேலாண்மைக் கோடியை நாட்டினர். 21 மணி, 36 நிமிடம், 21 நொடி நிலவில் உலவினர். 48 .5 பவுண்டு எடை நிலவுகள், மண் ஆகியவற்றோடு பூவுலகத்திற்குத் திரும்பினர்.
இவர்கள் பயணம் செய்த ''அப்பல்லோ 11 " என்ற வின்கலத்தைத் தொடர்ந்து பல விண்கலங்கள் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1970 -ஆம் ஆண்டு செப்டம்பர் 12 -ஆம் நாள் ரஷ்யா லூனா 16 என்ற ஆளில்லா விண்ணூர்தியை அனுப்பி நிலவில் மண்ணை எடுத்து வர செய்தது. பின்னர் லூனா 17 -ஐ நிலவுக்கு அனுப்பி எட்டு சக்கர எந்திர வண்டியை இறக்கி நிலவுத் தரையின் இயல்புகளை ரசிய அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
இவ்வாறு நிலவிலும். கதிரவனை சுற்றி சுழலும் கோள்களிலும் மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள் தொடர்கின்றன. இத்தகைய முயற்சிகள் மாந்தரின் சாதனை மற்றும் மாந்த நலனை முன்னிறுத்தும் முயற்சி என்ற நிலையைக் கடந்து, மேலாண்மை செய்யும் முதல் உலக நாடுகளின் முற்றான்மை முயற்சிகளில் இதுவும் ஒன்றாகியுள்ளது.



புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிந்து ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் கொலம்பசு, வாஸ்கோடகாமா போன்றோர் பயணங்கள் மேற்கொண்டனர். பேரழிவை ஏற்படுத்தும் அணுகுண்டு போன்ற படைக்கருவிகளை தமது நாடுகளில் வைத்தால் அழிவு ஏற்படலாம் என்பதால் பிற கோள்களைப் படைக்கருவி கிடங்க்குளாக மாற்றி அங்கிருந்தே தாக்குதல் நடத்தும் உள்நோக்கமும் வின்வேளிப்பயனங்களில் ஒளிந்துள்ளது.

இவ்வாறு இயற்கையை பிற நாடுகளை பிறகொள்களை அடிமைப்படுத்தும் மேலாண்மை மனப்பான்மையை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராட வேண்டும்

ஆம்சுட்ராங்கும் அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவுக்கு சென்று வந்ததை பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுகொண்டார்கள். என்றாலும் இன்று ஜெர்மானியர்கள் கேட்கும் கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறது......
கேள்வி இதுதான்.
1 , நிலாவில் காற்று இல்லை ஆனால் கோடி பறக்கிறது எப்படி?

2, சூரியனும் இல்லை, நிலாவில் தான் அவர்கள் இருக்கிறார்கள் ஆனால் நிழல் எப்படி வந்தது?

No comments: