திங்கள், ஜனவரி 4, 2010 12:45 | ஞானசீலன், யாழ்பபாணம்
தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்!
தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்க இடம் இன்றி அலைந்த திரிவதாகவும் இராணுவ முகாம்களுக்கு செல்லும் இவர்களை படையினர் அழைத்துக் கொண்டு வந்து தமிழ் பொதுமக்களின் வீடுகளில் தங்க வைப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள் தக்க வைக்க மறுக்கும் தமிழ் மக்கள் மிரட்டடப்படுவதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மிக நெருங்கிய உறவினர் கூட இரவில் தங்க வைக்க மறுக்கும் எமக்கு வந்த மிகப் பெரும் சோதனை எனவும் அவர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்க வைக்கப்பட்ட சிங்களவர் தமிழ் மக்களின் கலாச்சார கட்டுக் கோப்புகளை நன்கு தெரிந்திருந்தும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவற்றில் இருந்து தமது குழந்தைகளை காப்பாற்றி எவ்வாறு நாம் அவர்களுக்கு உரிய எதிர் காலத்தை அமைக்க முடியும் என்னும் கேள்வி தமக்குள் எழுந்துள்ளதாகவும் பல பொற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதை விட வீடுகளில் தங்கும் இவர்கள் தமிழ் மக்களுக்கு ஏவல் புரிவதாகவும் வெண்சுருட்டு, மதுபானம் மற்றும் பல பொருட்களை வியாபார நிலயத்தில் இருந்து வாங்கி வரும் படி கூறுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் அதற்கு பணம் கேட்கும் போது அருகில் உள்ள இரரணுவ முகாம் அதிகாரியிம் சென்று கேளுங்கள் அவர் தரவேண்டியதை தருவார் என்று மிரட்டுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ் கண்டி வீதியை அடுத்துள்ள வீடுகளின் அராயகம் தினமும் நடைபெறுவதாகவும் அதனால் தாம் பெருமளவில் மனமுடைந்துபோய் உள்ளதாகவும் வீதியோரக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அடங்கிப்போயிருந்த அவர்களது சேட்டை அனைத்தும் தற்போது வெளித் தெரிய ஆரம்பித்திருப்பது எதனால் என அனைவரும் புரிந்திருப்பார்கள் எனவும் இவை எப்போ நிறத்தப்படும் என்று தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment