Monday, May 24, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு தேவையா?


உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி இல்லாமல் அவசர அவசரமாக உலக தமிழ் மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டது ஏன்?
இந்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு நடத்திய தமிழ் இனப்படுகொலையை மறைக்கவும், வரவிருக்கும் மாநில தேர்தலை மனதில் வைத்தும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

உலக தமிழ் மாநாடு, உலக தமிழ் செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டது ஏன்?
இன்றைய தமிழ் மக்களின் நிலையை உணர்ந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் மாநாட்டிற்கு அனுமதி மருத்ததினாலும் நாங்கள் நினைத்ததை நடத்தியே தீருவோம் என்ற அகம்பவத்தாலும் மட்டுமே.

இந்த மாநாடு போதிய வசதிகள் இல்லாத நெருக்கடி மிகுந்த கோவையில் நடத்த திட்டமிட்டது ஏன்?
கோவையில் கடந்த தேர்தலில் ஓட்டு வங்கி சரிந்தாலும், ஏற்கனவே மத்திய அரசு நகர மேம்பாட்டுக்கு (ஜவகர்லால் நேரு நகர மேம்பாட்டு திட்டத்தில்)சுமார் ரூ. 3200 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாலும், இதுவரை உலகத் தமிழ் மாநாடு நடக்கவில்லை என்பதாலும் கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

உலக தமிழ் இனம் இலச்சக்கணக்கான உறவுகளை இழந்து தவிக்கும் இந்த சூழ்நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் கருத்தை ஒதுக்கிவிட்டு, உலக தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, ஏன் இந்த தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த வேண்டும்?

No comments: