Friday, May 6, 2011

அட்சயதிருதி - தங்கத்தில் முதலீடு சரியா?

தங்கத்தில் முதலீடு சரியா?


இந்தியாவில் இன்று ( 06.05.11 ) அட்சயதிருதி என்பதால் இன்று மட்டும் சுமார் 3000 கிலோ தங்கம் விற்பனை ஆகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ( அதாவது சுமார் 6,00,00,00,000 ரூபாய் )

அதாவது மக்களின் சுமார் 6,00,00,00,000 ரூபாய் பணம் முடக்கி வைக்கபடுகிறது.

உலகளவில், தங்கம் பயன்பாட்டில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செவதை இந்திய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவைப்பாடு, 1,200 டன் அல்லது தற்போதைய மதிப்பில் 2.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, உலக தங்க கவுன்சில், அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், தங்கத்தின் விலை, 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான தேவைப்பாடு 25 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு 2011ம் நிதியாண்டில், தங்கம் பயன்பாடு 1.75 சதவீதம் உயர்ந்து, 980 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் நிதியாண்டில், 963.10 டன்னாக இருந்தது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அட்சயதிருதி என்பது தங்கத்தை விற்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரிகளால் திட்டமிட்டு தொடங்கப்பட்டது. அது மக்களின் மத நம்பிக்கையுடன் கலக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் தொழில் தொடங்க , வீடு கட்ட, படிப்பு செலவுக்கு கடன் கிடைக்காமல் பலர் இருக்க இது தேவையா?

No comments: