Thursday, January 20, 2011

சுறவம் 6 - ஜனவரி 20 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.

1523 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.

1649 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.

1783 - பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.

1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.

1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.

1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.

1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.

1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.

1892 - முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.

1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.

1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.

1929 - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.

1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.

1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.

1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.

1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

பிறப்புகள்

1873 - ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)

1920 - பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலியத் திரைப்பட இயக்குனர் (இ. 1993)

1930 - எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்

1931 - டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1956 - பில் மேகர், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்

இறப்புகள்

1838 - ஒசியோலா, அமெரிக்க தொல்குடி போர்த் தலைவன் (பி. 1804)

1936 - ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)

1987 - பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)

சிறப்பு தினம்

அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் (1937 இலிருந்து)

No comments: