Wednesday, January 26, 2011

சுறவம் 9 - ஜனவரி 23 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

1570 - ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

1719 - புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.

1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1793 - ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தனர்.

1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1874 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.

1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.

1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

2002 - அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1876 - ஒட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனியர் (இ. 1954)

1897 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)

1907 - ஹிடெக்கி யுக்காவா, நோபல் பரிசு பெற்ற யப்பானியர் (இ. 1981)

1915 - ஆர்தர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1991)

1918 - கேர்ட்ரூட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (இ. 1999)

1929 - ஜோன் போல்யானி, நோபல் பரிசு பெற்ற கனடியர்

1930 - டெரெக் வால்கொட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

இறப்புகள்

1873 - இராமலிங்க அடிகள், ஆன்மீகவாதி (பி. 1823)

1944 - எட்வர்ட் மண்ச், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓவியர் (பி. 1863)

1989 - சல்வடோர் டாலி, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)

No comments: