Saturday, October 10, 2009

நமது பணி

“மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு, தாழ்வு, ஆண்டான் – அடிமைத்தன்மை ஒழிந்து ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சமசுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் சாதிபேதமும் ஒழிந்தால் தமது உயர்வும், தம் பிழைப்பும் கெடுமென்று எண்ணிப் பாடுபடாது வாழும் பார்ப்பனர்கள் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டு எங்களைத் தடைப்படுத்தும் பொழுது, அவை எவை யாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறேன்”.
—–தந்தை பெரியார்.

பகுத்தறிவின் அவசியம்

ஒரு சேலை வாங்கினால் கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா எனறெல்லாம் சிந்தித்துப் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறி விடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்து போகிறோம். இதை உணர்த்துவதுதான் – பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.
—தந்தை பெரியார்

நன்றி பகுத்தறிவு

No comments: