அன்பார்ந்த தமிழ் உறவுகளே!
இன்று நம்மினம் என்றும் இல்லாத வேதனையிலும், சோதனையிலும் தள்ளப்பட்டிருக்கின்றது. நம்மினத்துக்கு இன்று தான் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகின்றது. சிங்கள இனவாத அரசு 250,000 தமிழீழ மக்களை வதைமுகாம்களிற் பணையக் கைதிகளாக்கி நாடகமாடுகின்றது. இதைச் சர்வதேசம் கண்டும் காணாமல் தெரிந்தும் தெரியாமல் வியாபார நோக்கோடு அணுகின்றது.
அன்பார்ந்த உறவுகளே, நம் விடுதலையை நாம் தான் போராடிப் பெறவேண்டும். நாம் ஒவ்வொருவரும் போராளியாக மாறுவோம், ஏந்துவோம் துப்பாக்கியல்ல பேனாவை. பேனாவின் சக்தி துப்பாக்கியை விட வல்லமை கொண்டது. நாம் களத்தில் இறங்கும் நேரமிது.......எழுங்கள்...............எழுதுங்கள் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில், அறிமுக இணையத்தளங்களில் (Face book), உங்கள் பாராளமன்ற உறுப்பினர்களுக்குத், தெரிந்தவர்க்ளுக்குத், தெரியாதவர்களுக்கு என எல்லா முனைகளிளும் போராடுவோம். எமக்கு விடிவு கிடைக்கும் வரை போராடுவோம்.
இப்போராட்டம் ஆயுதத்தை விடக் கூர்மையானது என எதிரி நன்கு அறிவான்.அதனாற் தான் பல பில்லியன் ரூபாக்களைச் செலவிடுகின்றான். எல்லாச் செய்திச் சாதனங்களையும் வாங்க எத்தனிக்கின்றான். எல்லா மேற்குலக நாடுகளுக்கும் தன் உளவாளிகளை அனுப்பி எமது போராட்டத்ததை மழுங்கடிக்க முனைகின்றான்.
அன்புள்ள உறவுகளே, அவனின் இச்செயல்களை புத்திகூர்மையினாற்தான் முறியடிக்க முடியும். முதல்கட்டமாக எமது ஆள்தகவல்களை இல்லாதொழிப்போம். எமது நிழற்படம், உண்மைப்பெயர், முகவரி போன்றவற்றை அகற்றி எதிரி நம்மைப்பற்றி அறியவிடாமற் தடுக்கமுடியும். இதன் மூலம் நாம் பல போராளிகளை உருவாக்கமுடியும் என நம்புகின்றேன். நம்மொருவரை எதிரி அறிந்து கொண்டாலும் நாம் பலரை இழக்க வேண்டிவரும். ஆகவே உறவுகளே சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
நன்றி
ம.பொன்ராஜ்
No comments:
Post a Comment