Saturday, October 10, 2009

மின்னனு வாக்குபதிவு பொய்யா மெய்யா?

கடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் மின்னனு வாக்குபதிவு வழக்கம்போல " வரலாறு காணாத ஓட்டுபதிவு" நிகழ்ந்து இருக்கிறது. ஆனால் மின்னனு வாக்குபதிவு மீது எதிர்கட்சியினரும் மக்களும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

காரணம் பல அவற்றில் ஒரு சில இங்கே...

விருதுநகர்

எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரத்தில், கள்ள ஓட்டுப் பதிவு
நடந்திருக்கிறது என்ற புகார் இருக்கிறது; இது ஒதுக்கி விடக் கூடியது அல்ல என்கிற எண்ணத்தை, விருதுநகர் விவகாரம் ஏற்படுத்துகிறது.

விருதுநகரில் (வைகோ தொகுதி) பதிவான வாக்குகளை விட, வாக்கு எண்ணிக்கையின்போது 23,000 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருக்கின்றன. இது எப்படி நடக்கும்? பல பூத்களில் இயந்திரங்களில், கை சின்ன பட்டன், யாராலோ, பலமுறை அழுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாகி, வைகோவின் தோல்வி அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாருமே இவ்வாறு இயந்திரத்தில் புகுந்து விளையாடவில்லை என்றால், பதிவான வாக்குகள், எண்ணிக்கையின் போது கூடிய மாயம் எவ்வாறு நடந்தது?

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் என்பது இரு பகுதிகளை கொண்டது.

1. கட்டுப்பாட்டு பகுதி 2. வாக்கு பதிவு பகுதி

இவை இரண்டும் ஒரு 5 மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும்.
கட்டுப்பாட்டு பகுதி என்பது ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் அதிகாரி முன்பு வைக்கப்படிருக்கும்.
வாக்குப்பதிவு பகுதி என்பது வாக்களிக்கும் அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்கு மைய தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுக்கு பதிலாக கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்திய பிறகுதான் வாக்களிக்க வாக்கு பதிவு பகுதி தயாராகும். வாக்குப்பதிவு அறைக்குள் செல்லும் வாக்காளர் தான் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்தின் முன்பாக உள்ள நீல நிற பட்டனை அழுத்துவதால் வாக்குபதிவு செய்யப்படுகிறது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1998 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலின் போது மத்திய பிரதேசம்,(5) ராஜஸ்தான்(5) மற்றும் டெல்லி மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரமானது 6 வோல்ட் அல்கலைன் பேட்டரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே
மின்சாரம் இல்லாத பகுதிகளிலும் இதனை பயன்படுத்தலாம்.

ஒரு மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் அதிகபட்ச வாக்குகள் 3840.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 1500க்கு அதிகமாக வாக்குகள் பதிவாகாது என்பதால் இதுவே
போதுமானது.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் உள்ள வாக்கு பதிவு பகுதியில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்களின் பட்டியல் இருக்கும். 64க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்கு சீட்டு முறையைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வாக்கு பதிவு மையத்தில் உள்ள ஒரே ஒரு வாக்கு பதிவு இயந்திரம் செயல்படாமல் போனால் அந்த வாக்கு பதிவு மையத்தின் தேர்தல் அதிகாரி தன்னிடம் உள்ள கூடுதலான வாக்கு பதிவு இயந்திரத்தை
பயன்படுத்துவார். ஒரு வேளை வாக்கு பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயம் அந்த இயந்திரம் பழுதுப் பட்டாலும் கவலைப்பட்ட தேவையில்லை. ஏனெனில் அதுவரை பதிவான வாக்குகள் இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணிக்கையிலிருந்தே புது இயந்திரம் செயல்படும்.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பெங்களூர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஹைதராபாத்.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் விலை 1989ல் 5,500 ரூபாயாக இருந்து. இப்பொழுது அதைவிட குறைவு. ஆனால் வாக்கு சீட்டிற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள காகிதங்கள் அச்சடிக்கப்படுவதும் அதை குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவுகளுடன் ஒப்பிட்டால் இந்த மின்னணு வாக்குபதிவு
இயந்திரத்தினால் ஆகும் செலவு மிகமிக குறைவு.

நமது நாட்டில் எழுத்தறிவற்ற மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு மிகவும் எளிமையான முறை இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திர முறையே. வாக்களர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளரின் சின்னத்தின் அருகில் உள்ள நீல நிற பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். வாக்குப் பதிவாகிவிடும்.

தேர்தலின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை கூட வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் தடுக்க இயலும். வாக்கு சீட்டு முறையில் குறிப்பிட்ட சிலர் பாதுகாப்பை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி ஆயிரம் வாக்குகளை ஒரே நேரத்தில் தங்கள் வேட்பாளரின் சின்னத்தில் வாக்களித்து விட்டு சென்று விடலாம். ஆனால் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் ஓரு நிமிடத்தில் 5 வாக்குக்ளுக்கு அதிகமாக வாகளிக்க முடியாது. அது மட்டுமின்றி வாக்குசாவடியின் தலைமை அதிகாரி தன்னிடம் உள்ள கட்டுப்பாடு கருவியை அணைத்து விட்டால் மேற்கொண்டு ஒரு வாக்கும் பதிவாகாது.
எனவே தேர்தலின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை கூட வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் தடுக்க இயலும்.

ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலுக்கும் மாநில சட்ட பேரவை தேர்தலுக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை பயன் படுத்தலாம். ஆனால் வாக்குச்சீட்டு முறையில் தனித்தனியாகத்தான் வாக்குச் சீட்டு அச்சடிக்க வேண்டும்.

முன்பே கூறியது போன்று மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் காகிதம் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது மிக சீக்கிரத்தில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்து
விடலாம். முன்பு ஒரு தொகுதியின் முடிவை அறிவிக்க 30லிருந்து 40 மணி நேரமாகும். ஆனால் தற்போது இந்த மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணிக்கை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள்ளாக முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி இந்த இயந்திரம் செல்லாத வாக்குகளை தடுத்து விடுகிறது. வாக்குச்சீட்டு முறையில் ஒரு வாக்காளர் ஒரே நேரத்தில் இரு வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிடுவார். ஆனால் இந்த இயந்திரத்தில் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நீல நிற பட்டனை அழுத்திவிட்டால் அதுவே வாக்காக பதிவாகிவிடும். அடுத்த நீல நிற பட்டனை அழுத்தினாலும் வாக்கு பதிவாகாது.

இந்த வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதனால் வாக்களிக்கும் நேரமும் குறையும். முன்பு ஒரு வாக்காளர் வாக்கு சீட்டையும் மை நிரப்பிய முத்திரையையும் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்று கொண்டு வாக்களிக்கும் அறைக்குள் செல்ல வேண்டும். ஆனால் தற்போது நேராக வாக்களிக்கும் அறைக்குள் சென்று இயந்திரத்தின் பட்டனை அழுத்த வேண்டியதுதான்.

இந்த இயந்திரத்தின் மெமரியில் 10வருடங்கள் வரை பதிவான வாக்குகளை பாதுகாத்து வைத்திருக்கலாம்.

ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தோல்வியடைந்த வேட்பாளர் நீதி மன்றத்தில் தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் மீண்டும் வாக்குகளை எண்ணி அறிவிக்க இயலும்.
மேலும் வாக்கு பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் இந்த வாக்கு இயந்திரத்தின் பேட்டரியை அணைத்து கழற்றிவிட்டாலும் பதிவான வாக்குகள் இயந்திரத்தின் மெமரியில் இருக்கும்.

ஒருவர் தான் வாக்கு பதிவு சரியாக செய்தாரா இல்லையா என்பதை அவரே தெரிந்து கொள்ள முடியும். அவர் தன் வேட்பாளருக்கு நேராக உள்ள நீல நிற பட்டனை அழுத்திய உடன் அதற்கருகிலேயே ஒரு சிவப்பு விளக்கு எரியும். அதுமட்டுமின்றி ஒரு பீப் ஒலி கேட்கும். இதன் மூலம் தான் வாக்கு பதிவு செய்ததை அவர் தெரிந்து கொள்ள
முடியும்.

ஒரு வாக்காளர் தான் வாக்களிக்கும் போது அந்த இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு மின்சார பாதிப்பு ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. அது வெறும் 6வோல்ட் மட்டும் கொண்ட பேட்டரியால் இயங்குகிறது. அதில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மின்சாரம் பாய்வதில்லை.

நூறு வாக்குகள் வரை அது சரியாக இயங்குவதாகவும், நூறு வாக்குகளுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்குகள் விழுமாறு இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு வதந்தி மக்களிடையே நிலவுகிறது. அது தவறு. இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மைக்ரோ சிப்பை சிதைக்காமல் அதை திறந்து அது நூறு வாக்குகளுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குகள் சேரும்படி அதன் ப்ரோக்ராமை மாற்றி எழுத முடியாது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மிக லேசான எடை கொண்டிருப்பதாலும், அதை மூடகூடிய பெட்டி பாலிப்ரோபைலின் பொருளால் செய்யப்பட்டிருப்பதாலும் அதனை தூக்கிசெல்வது எளிது. ஒரு லாரிக்குள் வைக்கமுடிகிற வாக்கு சீட்டு பெட்டிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு எண்ணிக்கையில் இந்த இயந்திரங்களை வைக்கலாம்.

இந்த இயந்திரத்தை மிகவும் குளிர்ச்சியான பகுதியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அது வைக்கப்படுகின்ற அறையில் தூசுகளோ, தும்புகளோ இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மட்டும் அவசியம்.

வழக்கமான வாக்குச்சீட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின என சொல்ல முடிவதுபோல இந்த இயந்திரத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என சொல்ல முடியும். இந்த இயந்திரத்தின் டோட்டல் என்கிற பட்டனை அழுத்துவதன் மூலம் அதுவரை பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரியவரும். அதே போன்று ரிசல்ட் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரியவரும்.

ஒரு தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர். ஒரு இயந்திரத்தில் 16 பேருக்கான பட்டியல் இருக்கும் இந்த 11 முதல் 16 வரையிலான பட்டன்களை வாக்களர்கள் தவறுதலாக அழுத்தினாலும் வாக்குக்கள் பதிவாகாது. எனெனில் வாக்கு பதிவு துவங்குவதற்கு முன்பு தேர்தல் அதிகாரி அந்த 6
பட்டன்களையும் செயலிழக்கச் செய்துவிடுவார்.

முன்பு வாக்கு பெட்டிகளின் மீது எண் எழுதும் வழக்கம் இருந்தது போல் தற்போதும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதிக்கும் ஒரு சிறப்பு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணை ஒவ்வொரு வேட்பாளரின் தேர்தல் ஏஜெண்ட் பார்த்து எழுதிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அதற்கு பிறகுதான் வாக்குபதிவு துவங்கும். அதனால் இயந்திரம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கான சாத்தியமில்லை

க‌ட்சிக‌ளின் விள‌க்க‌ம்
பா.ம.க

ஓட்டுப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யலாம்!''-ராமதாஸ் செய்முறை விளக்கம்!!
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் எப்படி மோசடி செய்யலாம் என்பது பற்றி 'செயல்முறை விளக்கம்' அளித்தார். இதற்காக பாமகவே தயாரித்த எலக்ட்ரானிக் இயந்திரம் ஒன்றில் திமுகவின் உதயசூரியன், பாமகவின் மாம்பழம் உள்ளிட்ட சின்னங்கள் இருந்தன.

அந்த இயந்திரத்தில் நிருபர் ஒருவரை அழைத்து மாம்பழம் சின்னத்தில் 20 ஓட்டுகளை போடும்படி கூறினர். அதன்படி 20 ஓட்டுகள் போடப்பட்டன. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்தன என்று எண்ணும்போது, உதயசூரியன் சின்னத்துக்கு 8 ஓட்டுகளும், மாம்பழம் சின்னத்துக்கு 12 ஓட்டுகளும் விழுந்ததாக இயந்திரம் காட்டியது.

இதைக் காட்டி ஒரு ஓட்டுகூட போடப்படாத உதயசூரியன் சின்னத்துக்கு எப்படி 8 ஓட்டுகள் வந்தன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் உள்ள புரோகிராமை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல்விழும் ஓட்டுகள் எல்லாம் உதயசூரியன் சின்னத்துக்கு விழும்படி இயந்திரத்தில் புரோகிராமை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சின்னத்துக்கு போடும் ஓட்டுகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்துக்கு வரும்படியும் மாற்றலாம்.

ஓட்டு பதிவு செய்வதற்காக பட்டனை அழுத்தும் போது அங்கிருக்கும் அதிகாரிகள், குறிப்பிட்ட வயரை பிடுங்கிவிட்டு விடவும் வசதியுள்ளது. இதனால் சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால் ஓட்டு பதிவு ஆகாது என்று தானே உருவாக்கிய எந்திரத்தைக் காட்டி மனம்போன போக்கில் பேசினார் ராமதாஸ்.

அதிமுக
மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக, வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும்
ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக
இன்றைக்கு இயந்திரத்திலே கோளாறு என்று சொல்கிறவர்களைக் கேட்கிறேன் சென்ற முறை நடைபெற்ற தேர்தலிலே இதே இயந்திரத்தை வைத்துத் தானே தேர்தல் நடைபெற்று, இவர்கள் போட்டியிட்டார்கள். அப்போது வெற்றி பெற்றார்களே, அப்போது கோளாறு இல்லை, இப்போது மட்டும் கோளாறா? அவர்கள் வெற்றி பெற்றால் நல்ல இயந்திரம், தோற்றால் இயந்திரத்திலே கோளாறா?

"எங்கள் சின்னத்திற்கு வாக்கினைப் பதிவு செய்தால், அது உதய சூரியன் சின்னத்திலே விழுகிறது'' - என்ன அற்புதமான கற்பனை இது? அப்படியென்றால், விழுந்ததில், 9 இடத்தில் உங்களுக்கு சார்பாக விழுந்ததே, மொத்தம் 28 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே, அந்த 12 இடங்களில் மாத்திரம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்கள் சின்னத்தில் பதிவு செய்தால், உங்கள் சின்னத்திற்கே விழுந்திருக்கிறதா? மற்ற 28 இடங்களில் உங்கள் சின்னத்திற்கு வாக்கு பதிவு செய்தால், எங்கள் சின்னத்திற்கு விழுந்து விட்டதா? இதையெல்லாம் சிந்தித்து பார்க்கவேண்டும்.

தேமுதிக
தமிழக சட்டசபைக்கு நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேமுதிக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி ( குமுதம் 3-6-09)
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவைச் சந்தித்தோம். "தேர்தல் ஆரம்பிக்குறதுக்குப் கொஞ்சம் நேரம் முன்னாடி வோட்டிங் மெஷினின் சரியான செயல்பாட்டை எல்லா கட்சிகாரர்களுக்கும் காட்டுறதுக்காக ஒரு சின்ன சாம்பிள் தேர்தல் ( Mock Poll ) நடத்துவோம். மெஷினின் ஆபரேஷனில் எல்லோரும் திருப்தி ஆன பிறகுதான் தேர்தலைத் தோடங்குவோம். ஒரு சின்னத்துக்கு பட்டனை அழுத்துனா இன்னொரு சின்னத்தில் லைட் எரிஞ்ச சம்பவம் எல்லாம் அந்த சாம்பிள் தேர்தலில் நடந்ததுதான் அதை உடனே சரி செஞ்சாச்சு ஒரு வேட்பாளர் சர்ச்சைக்குரிய முறையில் ஜெயிச்சதாகச் சொல்லப் படுற புகாரைப் பொறுத்தவரை. அந்தத் தொகுதிக்குப் பொறுப்பு வகிச்ச "ரிட்டர்னிங் அஃபீசர்" எனக்கு தர்ற தகவலைத்தான் நான் சொல்ல முடியும்" என்ற நரேஷ் குப்தாவின் பேச்சில் எக்கச்சக்க கோபம்

ஏமாற்று வேலை

பெரும்பாலான‌ நாடுக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்தாத மின்னனு இயந்திர முறை (இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் அமுல்ப‌டுத்திய‌து ஏன்?

கடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் விரைவாக முடிவு அறிவிக்க முடியும் என்றாலும் தாமதமாக மாலை 6 மணிவரை இழுத்தடித்தது ஏன்?

பதிவான வாக்குகளை விட எண்ணும்பொழுது அதிக வாக்குகள் இருந்தது எப்படி?

வேக‌மான‌ வாக்குப‌திவு ம‌ட்டும‌ல்ல‌ வேக‌மாக‌ க‌ள்ள‌ ஓட்டும் போட‌முடியும் என்ப‌தெ உன்மை.

No comments: