Saturday, October 10, 2009

வணக்கம் நன்பர்களே,

வணக்கம் நன்பர்களே,
நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் பலவற்றை கற்றுகொள்ள முடியும். சமகாலத்தில் நடக்கும் நிகழ்வு நம் மனதை பாதித்ததோடு மட்டுமல்லாமல் படிப்பினையும் கற்று தந்திருக்கிறது.

இதுவரை நாம் கொண்ட கொள்கைக்கும், படித்த படிப்புக்கும், நம் கண்டும் காணாமல் நமக்கென்ன என்று இருக்கும் மெத்தனத்திற்கும் செருப்பால் அடித்து பல‌ சேதிகளை சொல்லி இருக்கிறது தற்பொழுது ஈழ‌த்தில் நடந்து கொண்டிருக்கும் இணப்படுகொலையும் அதன்காரணமாக நடக்கும் நாடகங்களும்.

நாம் கற்ற பாடங்கள் பல அவற்றில் சில‌

எவ்வளவு பெரிய படைகள், அரசியலமைப்பு, அறிவை நாம் கொண்டிருந்தாலும் நாம் ஒரே கொள்கையை பின்பற்றாதவரை வெற்றி என்பது அரிது.

இதுவரை நாம் நம்பிகொண்டிருந்த அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் முற்றிலும் போலிகள் என்று ஆணித்தரமாக உனர்த்தியிருக்கிறது.

புரட்சி என்பது நெருப்பு மாதிரி. அது மேல்மட்டத்திலிருந்து அல்ல‌ அடிமட்டத்திலிருந்து மட்டுமே வரமுடியும் என்பது .

இந்தியாவை பொருத்தவரையில் வெளியுறவு கொள்கை மட்டுமல்ல எதைவேண்டுமானாலும் மாற்றுவோம்,இந்த‌ அரசாங்கம் ஒரு நிருவனம்( Company ), இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமல்ல முதலாளிகளுக்கானது அதனை எதிர்ப்பவர்களை அழிக்க‌ அரசாங்கங்கள் ஒன்று சேரும் என்பதை உனர்த்தியிருக்கிறது.

இலங்கை இனப்படுகொலை நடத்த பணத்தை இரைத்த முதலாளிகளை வெளிச்சம்போட்டு காட்டி முதலாளித்துவம் பணத்துக்காக தன்னை நிர்வாணப்படுத்திக்கவும் தயங்காது என்பதை நிருபித்திருக்கிறது.

வாய்மையே வெல்லும் மத்ததெல்லாம் சும்மா என்ற பொய்மையை உடைத்து, வாய்மையே வெல்லும் என்பது மக்களை சும்மா இருக்க சொல்லி வைத்தது, வலிமை இருந்தால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை உறுதிபடுத்தி இருக்கிறது.

காலம்காலமாக நாம் வழிபட்ட கடவுள்களும் அவற்றை வைத்து கொள்ளை அடிக்கும் சாமியார்களின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. நம் உறவுகள் கொதுகொத்தாக கொல்லப்படும்போதும், அனுஅனுவாக சித்ரவதைக்கு ஆளாகும்போதும் பார்த்தால் கல்லும் கரையும். அப்படியிருக்க ஒரு உயிரைகூட காப்பாற்ற வராத கடவுள் இனிமேலும் இருப்பதாக நம்பாலாமா?. அப்படி கடவுள் இருந்தால் இதை அனைத்தையும் கண்டும் காணாமல் இருப்பவன் கொள்ளைகாரனைவிட கொலைகாரனைவிட மிக கெவலமானவன் ஆவான்.

நன்பர்களே இவற்றையெல்லாம் மறுப்பவர்கள் நமது எதிரிகள் அல்லது போலிகள்.

போலி நன்பனைவிட எதிரியேமேல்.

No comments: