Friday, August 6, 2010

ஆகஸ்டு 1- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள்
கொல்லப்பட்டனர்.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்

பிறப்புகள்

1929 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர் (இ. 1979)

1946 - குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

1949 - குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கிஸ்தான் சனாதிபதி

இறப்புகள்

1920 - பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)

2008 - ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)

2009 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி.
1933)

சிறப்பு நாள்

உலக சாரணர் நாள்

அங்கோலா - இராணுவ நாள்

பெனின் - தேசிய நாள் (1960)

கொங்கோ - பெற்றோர் நாள்

லெபனான் - இராணுவ நாள்

சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)

யாசர் அராபத் பிறப்பு

No comments: