Friday, August 6, 2010

ஆகஸ்டு 4 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

70 - ரோமர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டது.

1578 - மொரோக்கர்கள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துக்கல் மன்னன் செபஸ்டியான் போரில் கொல்லப்பட்டான்.

1693 - சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.

1704 - ஆங்கில, டச்சுக் கூட்டுப்படைகளினால் கிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.

1789 - பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

1824 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1860 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.

1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.

1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.

1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.

1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.

1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

1991 - "ஓசியானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.

2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

பிறப்புக்கள்

1908 - ரீ. உருத்திரா, முன்னாள் கொழும்பு நகரத் தந்தை (இ. 1960)

1929 - கிஷோர் குமார், இந்தியாப் பாடகர், நடிகர் (இ. 1987)

1961 - பராக் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதி

இறப்புகள்

2006 - பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்

2008 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)

சிறப்பு நாள்

புர்கினா பாசோ - புரட்சி நாள்

No comments: