Friday, August 6, 2010

ஜூலை 31 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

30 BC - மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1498 - தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.

1588 - ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1655 - ரஷ்யா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.

1741 - புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.

1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1938 - கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகொஸ்லாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

1964 - சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1976 - வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

1987 - ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 - மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

1992 - நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 - வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

பிறப்புகள்

1704 - கேப்ரியல் கிராமர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் (இ. 1752)

1874 - செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)

1912 - மில்ட்டன் ஃப்ரீட்மன், பொருளியல் நிபுணர் (இ. 2006)

1966 - ஜே. கே. ரௌலிங், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

1805 - தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பி. 1756)

1980 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர். (பி. 1924)


தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்.

No comments: