Friday, August 6, 2010

ஆகஸ்டு 6- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1661 - போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.

1806 - கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.

1825 - பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.

1914 - முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட
70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.

1952 - இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.

1960 - கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.

1961 - வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.

1962 - ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1964 - அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.

1991 - உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.

1996 - செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.

1997 - வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

2006 - திருகோணமலையில் நோயாளரை ஏற்றி வந்த ஆம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒரு நோயாளி கொல்லப்பட்டார்.

[தொகு] பிறப்புக்கள்

1881 - அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)

1970 - எம். நைட் ஷியாமளன், ஹாலிவுட் இயக்குனர்

இறப்புகள்

1978 - பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் (பி. 1897)

2009 - முரளி, மலையாள நடிகர் (பி. 1954)

சிறப்பு நாள்

பொலீவியா - விடுதலை நாள் (1825)

ஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)

ஜப்பான் - டோரோ நாகாஷி - ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.

ஹிரோஷிமா நினைவு நாள்



பேரிடர்களையும், அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக அழிவையும் உருவாக்கியவை அணு உலைகளும், அணு குண்டுக்களுமே. இரண்டாம் உலகப்போரில் எல்லாராலும் மறக்க முடியாத பேரழிவை அணுகுண்டு ஏற்படுத்தியது.

1945 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 -ஆம் நாள் அணுகுண்டு என்றால் என்னவென்று அறியாத உலகத்திற்குப் போர் வெறி கொண்ட அமேரிக்கா, சப்பான் நாட்டில் உள்ள கிரோசிமா நகரில் அணுகுண்டு ஒன்றினை வீசி அறிமுகப்படுத்தி, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சப்பானியர்களை கொன்றது. அணுகுண்டால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையற்றவர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் என்று பல நூறு ஆயிரக்கணக்கான் மக்கள் அன்று காணப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களின் உடல்கள் சிதைந்து காணப்பட்டன.

அணுகுண்டிலிருந்து வெளியான கதிர்வீசுகள் 50 ஆண்டுகள் கழிந்த பிறகும் மனித சமூகத்திற்கு தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது. 2000 போர் வானூர்திகள், 2000 டன் எடை வெடி மருந்துகளை ஒரே நேரத்தில் வீசினால் எத்தகைய பேரழிவுகளை உண்டாக்குமோ அந்த அளவிற்கு ஏற்பட்டதாக அறிவியல் அறிஞர்கள் அளவிடுகின்றனர்.

இன்றும் நரம்புத்தளர்ச்சி, உளவியல் சிக்கல்கள், புற்றுநோய், தோல்நோய் என ஏராளமான நோய்கள் மக்களை தாக்கிவருகின்றன. கதிரியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் கருவுற்ற பெண்களே. அங்கு பிறக்கின்ற 75 % குழந்தைகள் குறைகளோடு பிறக்கின்றனர்.

இன்று அணுகுண்டு எதிர்ப்பு இயக்கம் உலக அளவிலான ஒரு பேரியக்கமாக வளர்ந்து வருகிறது. 06 .08 .1998 அன்று சப்பானிய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கிரோசிமாவில் உள்ள அணுகுண்டு நினைவுத் தூண் முன்பு 53 ஆவது அணுகுண்டு வெடிப்பு நாளை, அணுகுண்டு எதிர்ப்பு உண்ணா நோன்பாக கடைபிடித்தனர்.

02 .08 .1999 முதல் 09 .08 .1999 வரை சப்பானில் ஒரு வார காலம் அணு எதிர்ப்பு மாநாடு கிரோசிமாவில் உள்ள ஆச்டர்பிளாவில் நடைபெற்றது. இதில் 21 நாடுகள், 38 இயக்கங்கள் பங்கெடுத்தன. இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் சப்பானியர்களும் அணு எதிர்ப்பாளர்களும் இந்த நாளில் அடையாள எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இயங்கி வரும் அணு உலைகளையும், அணுகுண்டுகளை உற்பத்தி செய்வோரையும் தடுத்து நிறுத்த உறுதி ஏற்பது நமது கடமை.

No comments: