நிகழ்வுகள்
1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.
1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.
1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
1848 - அயர்லாந்தில் "டிப்பெரரி" என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
1900 - இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.
1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.
1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.
1967 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.
1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
1883 - முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)
1904 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)
1905 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)
இறப்புகள்
1913 - டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)
1974 - கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
1999 - நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி
2009 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
2009 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
சிறப்பு நாள்
ருமேனியா - தேசிய கீத நாள்
பரமக்குடி சாதிய மோதலும்
காவல் துறைத் துப்பாக்கி சூடும்
No comments:
Post a Comment