நிகழ்வுகள்
811 - பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
1139 - முதலாம் அபொன்சோ போர்த்துக்கல்லின் முதலாவது மன்னனாக முடிசூடி லெயோன் பேரரசில் இருந்து விடுதலையை அறிவித்தான்.
1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
1847 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1891 - டெஹீட்டி பிரான்சுடன் இணைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லுவிவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.
1945 - ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.
1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953 - கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.
1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 - மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971 - அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.
1974 - ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1994 - எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.
பிறப்புகள்
1791 - பிரான்ஸ் மொசார்ட், இசையமைப்பாளர் (இ. 1844)
1856 - ஜோர்ஜ் பெர்னாட் ஷா, எழுத்தாளர் (இ. 1950)
1933 - எட்மண்ட் ஃவெல்ப்ஸ், பொருளியல் அறிஞர்
1933 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
1939 - ஜோன் ஹவார்ட், ஆஸ்திரேலியாவின் 25வது பிரதமர்
1971 - மேரி ஆன் மோகன்ராஜ், எழுத்தாளர்
இறப்புகள்
1857 - ஒராசியோ பெட்டாச்சினி, யாழ்ப்பாணம் ஆயர்
சிறப்பு நாள்
மாலைதீவு - விடுதலை நாள் (1965)
லைபீரியா - விடுதலை நாள் (1847)
தோள்சீலை போராட்டம் வெற்றி
சோதி பாபுலே மகாராட்டினதிலும், ஈ.வே.ரா. தமிழகத்திலும், நாராயணகுரு கேரளத்திலும் சமூக நன்மைக்காக இயக்கம் கண்டுகொண்டிருந்த வேளையில் முக்கடல் கூடும் குமரி மாவட்டத்தில் கிறித்துவ பாதிரியார் சார்லசு பீட் பெண்ணிய உரிமையை வென்றெடுக்க ஒரு நெருப்பு துண்டை போட்டார்.
1818 -ஆம் ஆண்டு சீர்திருத்த அபை அருள் தொண்டராக சார்லசு பீட் குமரி மாவட்டத்தில் பணி செய்ய வந்தார். முதலில் குளச்சலில் பணி செய்ய வந்தவர் மைலாடிக்கு அழைக்கப்பட்டார். அவரை பார்த்ததும் மைலாடி மக்கள் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் அவரை சந்திக்க வந்தனர். மார்பகங்களை மறைக்கத் துணி இல்லாமல் அரை நிர்வாணிகளாய் கட்சி தந்த பெண்களை பார்த்து, "உடலை மறைக்க ஒரு முலம் துணி கிடையாதா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "எங்களுக்கு முழு ஆடை அணிய உரிமை இல்லை. உயர் சாதியினரையோ, அரசு அதிகாரிகளையோ வணங்கி வரவேற்க மார்பகங்களை மறைத்து கட்டியிருக்கும் துணியை அவிழ்த்து அவர்களுக்கு மார்பகங்களை காட்ட வேண்டும். இல்லையெனில் எங்கள் மார்பகங்கள் அறுக்கப்படும்." என்றனர்.
அன்று தொடர்ந்த முதல் கட்ட போராட்டம் 3 கட்டங்களாக 37 ஆண்டுகள் நடந்தது.. இந்த பகுதியில் சாதியத்தின் பெயரால், நிளுடமையின் திமிர்வாத ஆளுகையால், ஒடுக்கப்பட்ட சாதியினராக முத்திரை குத்தப்பட்ட காவதி, சலவை தொழிலாளர், சாம்பவர், பறையடிப்பவர்கள், செரமர், புலையர், ஈழவர், நாடார் போன்ற சாதியே பெரும்பான்மையாக இருந்தனர். நன்பூதிரி பார்ப்பனர், வேளாளர் ஆகியோருடைய ஆதிக்கம் இருந்தது. ஆளும் சாதிக்கு கூலியாக நாயர் சமூகம் இறங்கியது. மதம், சாதிகளை கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் இணைக்கப்பட்டனர். எழுச்சியை கண்டு பொறுக்காத மேலாண்மை சாதியினர் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர்.
26 .07 .1859 இல் அரசின் ஆணைக்குப் பின் தோள்சீலை
போராட்டம் உச்ச நிலை அடைந்து வெற்றி கண்டது.
ஜார்ஜ் பெர்னாட்சா பிறப்பு.
உலகின் தலை சிறந்த நாடக ஆசிரியர்களுள் ஒருவரான ஜார்ஜ் பெர்னாட்சா 26 .07 .1856 இல் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய் ஓர் இசை வல்லுனராக இருந்ததால் தன மகனையும் இசைத்துறையில் வளர்க்க முயன்றார். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக தனது ௧௫ -வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தன தாயுடன் இலண்டன் சென்றார்.
இலியட் ஒடிசி போன்ற கிரேக்க பழங்கதைகளையும் சேக்ஸ்பியர், டிக்கன்சு, பேன்யன் போன்றோரின் பாடல்களையும், மொசார்ட்டின் இசைநாடகங்களையும், விவிலியம், அராபிய இரவுகள் போன்ற நூல்களையும் ஆர்வமுடம் படித்தார். எழுத்து துறையில் ஆர்வம் கொண்டு பல்வேறு செய்தி இதழ்களுக்கு சமூக சீர்திருத்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
தனது வாழ்நாளில் ஒரு முறை கூட புகை மற்றும் மது அருந்தாத சிறந்த பேச்சாளர்களாகவும் சமூக சீர்திருத்தப் பணியாளராகவும் மாறினார். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர்களுள் இவரும் ஒருவர். சிறந்த நாடகத் திரனைவாலராக விளங்கிய பெர்னாட்சா சேக்சுபியரின் நாடகங்களைக் கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்தினார். 'மனைவியை இழந்தவர்களின் வீடுகள்' என்ற நாடகத்தில் தொடங்கி மொத்தம் 47 நாடகங்கள் எழுதியுள்ளார். சீசர் மற்றும் கிளியோபாட்ரா என்ற நாடகத்தின் மூலம் பழைய நாடக இலக்கண வரம்புகளை முறியடித்து பல புதுமைகளை. நகைச்சுவை நிறைந்து கானப்பத்வது இவரது நாடகங்களின் சிறப்பு கூறு ஆகும்.
பெர்னாட்சா, இட்லர், முசோலினி ஆகியோரது சுறுசுறுப்பையும் செயல்வன்மையும், நாட்டுப்பற்றையும், தங்கள் நாட்டு மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையும் பாராட்டினர். முதல் உலகப் போரில் இங்கிலாந்து மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கையைக் குறைகூறினார்.
"புனித சோன்" என்ற மிகச் சிறந்த நாடத்தை படைத்து, 1925 -இல் நோபல் பரிசு பெற்றார். மெய்யியல், சமூகவியல், அரசியல், சமயம் ஆகிய துறைகளுக்கு இலக்கியத் தகுதியை தந்து, வாழ்வுடன் தொடர்புடைய பல நாடகங்களை உருவாக்கி தனது இறுதி மூச்சு வரை இலக்கிய, நாடக சமூக சீர்திருத்த பணியாற்றிய பெர்னாட்சா 2 .11 .1950 அன்று இறந்தார்.
No comments:
Post a Comment