Saturday, August 14, 2010

ஆகஸ்டு 15 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1040 - ஸ்கொட்லாந்தின் மன்னன் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான்.

1057 - ஸ்கொட்லாந்தின் மன்னன் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டான்.

1915 - பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.

1920 - வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.

1947 - முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.

1947 - இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார்.

1948 - தென் கொரியா உருவாக்கப்பட்டது.

1950 - அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.

1960 - கொங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1973 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.

1975 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.

1977 - இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலை ஆரம்பித்தது. 400ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.

1984 - துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இராணுவத்திற்கெதிராக கெரில்லா போரை ஆரம்பித்தன்னர்.

2005 - இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கைச்சாத்தானது.

2007 - பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1769 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (இ. 1821)

1872 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மிகவாதி (இ.1950)

1958 - அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1961 - சுஹாசினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1975 - ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1920)

சிறப்பு நாள்

இந்தியா - விடுதலை நாள் (1947)

தென் கொரியா - விடுதலை நாள் (1948)

கொங்கோ - விடுதலை நாள் (1960)

No comments: